தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இருக்கற பஞ்சாயத்து நமக்கெல்லாம் தெரிஞ்சதுதான். அப்பப்போ ஆளுநர் ஏதாகது கொளுத்தி போடுறதும், அதுக்கு தமிழ்நாடு அரசு ஏதாவது பதிலடி கொடுக்குறதும் வாடிக்கையா நடந்துட்டு இருக்கு. அந்த வரிசைல, இப்போ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்னுக்கு, ஆளுநர் ஒரு கேள்விய முன்வச்சுருக்கார். அது என்னன்னு பார்க்கலாம் வாங்க.

தமிழ்நாடு அரசு-ஆளுநர் இடையே நீடிக்கும் மோதல் போக்கு

தமிழ்நாடு ஆளுநரா ஆர்.என். ரவி பதவியேற்றதுல இருந்தே, தமிழ்நாடு அரசுக்கும் அவருக்கும் ஆகல. சட்டமன்ற கூட்ட தொடக்கத்துல, அரசோட உரைய வாசிக்காம, தன்னோட விருப்பம்போல செயல்படறதும், கூட்டத்த புறக்கணிச்சு வெளியே போறதும், அசசோட கோப்புகள கிடப்புல போடறதும்னு, பல விஷயங்கள்ல அவர் அரசுக்கு எதிராவே செயல்படறார்னு குற்றம்சாட்டப்படுது. கடைசியா நடந்த சட்டமன்ற கூட்டத் தொடர்ல கூட, ஆளுநர் உரைய வாசிக்காம, அவைய புறக்கிணிச்சுட்டு வெளில போனது பெரிய சர்ச்சைய ஏற்படுத்துச்சு. ஆனாலும், அவர் கண்டுக்காம, அவர் செய்யுறததான் செஞ்சுட்டு இருக்கார். மறுபுறம், ஆளுநர மாத்தணும்னு கூட தமிழ்நாடு அரசு சார்பா மத்திய அரச கேட்டாங்க. அந்த அளவுக்கு இரண்டு தரப்புக்கும் மோதல் போக்கு நீடிச்சுட்டு வருது.

காந்தி மண்டபத்தில் ஆளுநர் மரியாதை

இப்படிப்பட்ட சூழல்ல, இன்னைக்கு(30.01.25) மகாத்மா காந்தியோட புண்ணிய திதியில, காந்தி மண்டபத்துல, மகாத்மா காந்தியோட உருவச்சிலை மற்றும் உருவப் படத்துக்கு, ஆளுநர் ஆர்.என். ரவி மலர் தூவி மரியாதை செலுத்துனார். அது பத்தின ஆளுநர் மாளிகையோட ட்வீட்ல, அமைதி, தன்னலமின்மை மற்றும் அஹிம்சையின் கலங்கரை விளக்கமாக அவரது வாழ்க்கையும் காலத்தால் அழியாத லட்சியங்களும் விளங்கி 2047ம் ஆண்டுக்குள் இணக்கமான, சமத்துவமான மற்றும் வளமான உலகத்தை உருவாக்குவதற்கான நமது கூட்டுப் பார்வையை வழிநடத்துகின்றன அப்படீன்னு பதிவு பண்ணியிருக்கார்.

காந்தி இன்றும் கேலி செய்யப்பட வேண்டுமா.? என கேள்வி

இந்த ட்வீட்டோட, "காந்தி மண்டபம், சென்னை கிண்டி தேசிய உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள ஒரு பரந்த நிலத்தில் 1956ம் ஆண்டு கே. காமராஜர் அவர்களால் கட்டப்பட்ட  பிரம்மாண்டமான நினைவுச்சின்னமாகும். காந்தி நினைவு நிகழ்வுகளை - அவரது பிறந்தநாள் மற்றும் உயிர்த்தியாக தினத்தை - நகர அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் ஏதேனும் அர்த்தமுள்ளதா? தேசப்பிதாவுக்கு உரிய மரியாதை செலுத்தவும், அத்தகைய நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்தவும் முதலமைச்சரிடம் நான் பலமுறை விடுத்த கோரிக்கைகள் பிடிவாதமான மறுப்பை சந்தித்தன. காந்திஜி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார். ஆனால் இன்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா?" அப்படீன்னு தமிழ்நாடு அரசுகிட்ட கேள்வி எழுப்பற மாதிரி இன்னொரு ட்வீட்டையும் ஆளுநர் போட்டுருக்கார்.

ஏற்கனவே அரசுக்கும் அவருக்கு இடையில மோதல் இருக்கற நிலைல, இந்த கேள்விக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்ன பதில் தரப் போறார்னு பார்க்கலாம்.