Madurai Power Shutdown: 19.12.2024  மாதாந்திர பராபரிப்பு காரணமாக நாளை மதுரையில் பல்வேறு பகுதியில் நாளை மின் தடை செய்யப்படுகிறது.


தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று மின் வாரியம் மூலம் தகவல் அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம்  மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது. மதுரை மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தனியாமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு வேலை நடைபெற உள்ளதால் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக மதுரை கிழக்கு மின் செயற்பொறியாளர் இரா.கண்ணன் வெளியிட்டுள்ளார்.


மின்நிறுத்தம் செய்யப்படும் ஊர்களின் பெயர்கள்:


 

கீழையூர், கீழவளவு, செம்மினிப்பட்டி, கொங்கம்பட்டி, முத்துச்சாமிபட்டி, தனியாமங்கலம், சாத்தமங்கலம், வெள்ளநாயக்கம்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி, சருகுவலையபட்டி, பெருமாள்பட்டி இ.மலம்பட்டி, கரையிப்பட்டி, கோட்டநத்தம்பட்டி, வெள்ளலூர் மற்றும் தர்மதானப்பட்டி ஆகிய பகுதிகளாகும்

 

அதே போல் உசிலம்பட்டி மின்செயற்பொறியாளர் கோ.வெங்கடேஷ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் நாளை 19.12.24 காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

 


மின்நிறுத்தம் செய்யப்படும் ஊர்களின் பெயர்கள்:


 

உசிலம்பட்டி நகர், கவண்டன்பட்டி, பூதிப்புரம், கள்ளபட்டி, வலையபட்டி, K.போத்தம்பட்டி, அயன்மேட்டுப்பட்டி, மலைப்பட்டி, கரையாம்பட்டி, நல்லுத்தேவன்பட்டி, சீமானுத்து, கொங்கபட்டி, மேக்கிலார்பட்டி, கீரிபட்டி, ஒத்தபட்டி, பண்ணைப்பட்டி, சடையாள், கன்னியம்பட்டி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள்







 

தும்மக்குண்டு துணைமின்நிலையம்

 

சிந்துபட்டி, தும்மக்குண்டு, பெருமாள்கோவில்பட்டி, காளப்பன்பட்டி பூசலப்புரம், ஈச்சம்பட்டி, பாறைப்பட்டி, காங்கேயநத்தம், தங்களாச்சேரி, பொக்கம்பட்டி, வாகைக்குளம், அழகுசிறை, சலுப்பபட்டி, P.மேட்டுப்பட்டி