நாளை 18.12.2024 (புதன்கிழமை) அன்று 110/11 KV நரசிங்கம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு வேலை நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 09:00 மணிமுதல் மாலை 05:00 மணிவரை கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் தடைப்படும் என்பதை மதுரை கிழக்கு மின் செயற்பொறியாளர் இரா.கண்ணன் வெளிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

மின்விநியோகம் தடைப்படும் ஊர்களின் பெயர்கள்:


முத்துபட்டி, சிதம்பரம்பட்டி, அயிலான்குடி, சிட்டம்பட்டி, அப்பன் திருப்பதி, கைலாசபுரம், மாங்குளம், செட்டிகுளம், கண்டமுத்துபட்டி, லெட்சுமிபுரம், பட்டணம், வெள்ளரிபட்டி, அரும்பனூர், மலையாண்டிபுரம், புதுப்பட்டி, தேத்தாங்குளம், ரைஸ்மில், அரிட்டாபட்டி, கல்லம்பட்டி, விநாயகபுரம், சூரக்குண்டு, தெற்கு தெரு, மருதூர், பூலாம்பட்டி, திருக்கானை, இலங்கிபட்டி, காயாம்பட்டி வலச்சிக்குளம், நரசிங்கம்பட்டி ஆகிய பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

 

உசிலம்பட்டி பகுதியில் மின்தடை


 

அதே போல் நாளை 18.12.24 அன்று உசிலம்பட்டி சில்லாம்பட்டி, எம்.புதுப்பட்டி ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

 

தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று மின் வாரியம் மூலம் தகவல் அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அல்லது காலை 9 மணி  முதல் மாலை 2 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம்  மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.