சிவாஜி கணேசனின் பேரனான சிவக்குமாருக்கு தாத்தா சொத்து சேருமா? சேராதா என்பது குறித்து கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக ஒரு பேச்சு அடிபட்டு கொண்டுதான் இருக்கிறது. இது குறித்து மூத்த பத்திரிக்கையாளரான சேகுவேரா யூடியூப் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் உடைத்து பேசியுள்ளார். இது குறித்து அவர் என்ன பேசியிருக்கிறார் என்று பார்க்கலாம் வாங்க…
சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார்:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்து பாதியிலேயே வெளியேறியவர் சிவக்குமார். சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் மனைவி இருக்கும் போது ரகசியமாக சாவித்திரியுடன் வாழ்ந்து வந்தார். ஆனால், குஷ்பு மற்றும் பிரபு கதை கூட அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால், சிவாஜியின் மகன் ராம்குமாருக்கு அப்படி ஒரு உறவு இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர் ஸ்ரீபிரியாவின் சகோதரியுடன் ரகசியமாக நெருங்கி பழகி வந்துள்ளார். ஆனால், இப்போது சிவக்குமார் தான் ராம்குமாரின் மகன் என்று ஊர் உலகத்திற்கு தெரிய வந்திருக்கிறது. இத்தனை ஆண்டுகாலமாக ராம்குமார் ஏன் இந்த உறவை ரகசியமாக வைத்திருந்தார் என்றால், அவர்களுக்கும் சொத்து கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
ராம்குமாருக்கு என்று தனியாக சொத்துக்கள் இருக்கும் போது அதனை சிவக்குமாருக்கு எழுதி வைக்கலாம் அல்லவா? ஒருவேளை அவரிடம் சொத்து இல்லையா? இல்லை இது முழுக்க முழுக்க அவரின் அப்பாவின் சொத்தா? இல்லையெனில் ஏன் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ என்பது குறித்து தெரியவில்லை.
வஞ்சிக்கப்படும் சிவகுமார்:
பெண்ணை ஏமாற்றி சிதைத்துவிட்டு இப்போது அவருடைய வாரிசையும் ஏற்றுக் கொள்ள மறுப்பதோடு அவரை வஞ்சிப்பது என்பது கொடுமையிலும் கொடுமை. ராம்குமார் இப்படியெல்லாம் செய்யலாமா? அவர் முதலில் சிவக்குமாரை தன்னுடைய மகனாக ஏற்றுக் கொள்ள வேண்டும். சினிமாவில் யாருக்குமே 2 மனைவிகள் இல்லையா? அதிகாரம், ஆடம்பரம் ஆகியவற்றுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? இன்று சிவக்குமாருக்கு நடக்கும் சம்பவங்கள் தான் நாளை சிவக்குமார் மற்றும் சுஜா வரூணியின் மகனுக்கு நடக்கும். இப்படியெல்லாம் நடந்தால் அது சிவாஜி கணேசனுக்கு தான் கெட்ட பெயரை கொடுக்கும் என்று கூறியுள்ளார்.