Madurai Rural Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (17.12.2024) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மின் பாதையில் பராமரிப்பு பணிகள்
தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று மின் வாரியம் மூலம் தகவல் அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில் மின் நிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு மின் வாரிய மதுரை திருமங்கலம் செயற்பொறியாளர் பி.முத்தரசு குறிப்பிட்டுள்ளபடி நாளை மின் தடை செய்யப்படவுள்ள பகுதிகளை பார்க்கலாம்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்
பேரையூர் நகர் பகுதி, சின்னபூலாம்பட்டி, பெரியபூலாம்பட்டி, P.தொட்டியபட்டி, சாலிசந்தை, சிலைமலைப்பட்டி, கூவலாபுரம், ராவுத்தன்பட்டி, மேலப்பட்டி, ச.பாரப்பத்தி, தும்பநாயக்கன்பட்டி, சாப்டூர் நகர் பகுதி, பழையூர், செம்பட்டி, அத்திபட்டி, மைனூத்தாம்பட்டி, வண்டாரி, அணைக்கரைபட்டி, வண்டபுலி, வாழைத்தோப்பு மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களுக்கு ஆகிய பகுதிகளுக்கு 17.12.2024 தினம் காலை 09.00 மணி முதல் மாலை 17.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் மதுரை கிழக்கு மின் செயற்பொறியாளர் இரா.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்..,” பனையூர், சொக்கநாதபுரம், அய்யனார்புரம், சாமநத்தம், பெரியார் நகர், கல்லம்பல், சிலைமான், கீழடி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகள் நாளை 17.12.24 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - "எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Aadhav Arjuna: விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா விலகல் - கடிதத்தில் இருப்பது என்ன?