மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (12.11.2024) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. மின் பாதையில் பராமரிப்பு பணிகள் தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று மின் வாரியம் மூலம் தகவல் அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும்.
தமிழ்நாடு மின் வாரிய மதுரை கிழக்கு செயற்பொறியாளர் செய்திக் குறிப்பு
இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில் மின் நிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு மின் வாரிய மதுரை கிழக்கு செயற்பொறியாளர் இரா.கண்ணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது.
மின்விநியோகம் தடைப்படும் ஊர்களின் பெயர்கள்:
வலையங்குளம் துணை மின்நிலையம்
வலையங்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, பாரபத்தி, சோளங்குறுணி, நல்லூர். குசவன்குண்டு,மண்டேலாநகர், சின்னஉடைப்பு, வலையப்பட்டி, ஒ.ஆலங்குளம், கொம்பாடி முதலிய பகுதிகள்.
கொட்டாம்பட்டி துணை மின்நிலையம்
காட்டாம்பட்டி, சின்னக் கொட்டாம்பட்டி, பொட்டப்பட்டி, வெள்ளிமலை, முடுக்கன்காடு, தொந்திலிங்கபுரம். சொக்கம்பட்டி, மணப்பச்சேரி, வெள்ளினிப்பட்டி, V.புதுார், சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுப்பட்டி, பள்ளப்பட்டி, புதுப்பட்டி, கருங்காலக்குடி பான்டாங்குடி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ‘’உண்மையிலேயே தமிழச்சிக்குப் பிறந்திருந்தால்… வா மோதிப் பார்க்கலாம்’’- வருண்குமார் எஸ்பிக்கு சீமான் அழைப்பு!