தவெக தலைவர் விஜய் நல்லது செய்தால், பாராட்டிவிட்டுச் செல்ல வேண்டியதுதானே? நீங்கள் 27ஆம் தேதி முடிந்த பிறந்த நாளை, நேற்று வரை கொண்டாடிக் கொண்டு இருக்கிறீர்கள். சரியென்றால் சரி, தவறென்றால் தவறு என்போம். எல்லாவற்றையும் குறை சொல்ல நாங்கள் என்ன மன நோயாளிகளா? என்று சீமான் தெரிவித்துள்ளார்.
திருச்சி எஸ்பி வருண்குமார், நாம் தமிழர் இயக்கத்தை பிரிவினை வாத இயக்கம் என்று விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஆவேசமாக பதிலளித்த சீமான், ’’நாம் தமிழர் இயக்கத்தை திருச்சி எஸ்பி வருண் குமார் நீண்ட நாட்களாகவே கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார். புதிதாகக் கண்காணிக்கப் போகிறார்களா?
36 லட்சம் வாக்கு வங்கி, 3ஆவது பெரிய கட்சி
இந்திய அரசியலமைப்பின்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து, 13 ஆண்டுகளாக அரசியல் இயக்கத்தை நடத்தி வருகிறோம். மக்கள் இயக்கம் எங்களுடையது. 36 லட்சம் வாக்குகளை வாங்கி, 3ஆவது பெரிய கட்சியாக இருக்கிறோம். தனித்து நின்றே போட்டி இடுகிறோம்.
நீங்கள் எங்களை திடீரென்று பிரிவினை வாத இயக்கம் என்பதா? எதை வைத்துப் பிரிவினை என்கிறீர்கள்? இவரா (வருண் குமார்) நாட்டை ஆள்கிறார்?
பிரதமர் மோடி தமிழ் பேரினவாதியா?
தமிழன் நான், தமிழன் என்று சொன்னால் பேரினவாதமா? பிரதமர் மோடி, உலக மொழிகளில் தமிழ் மூத்த மொழி என்கிறாரே, அது தமிழ் பேரினவாதமா?
நீ உண்மையிலேயே தமிழ்த் தாய்க்கும் தமிழ்த் தகப்பனுக்கும் பிறந்தாயா? அப்படி இருந்தால் தமிழ் பேரினவாதம் என்று சொல்வாயா? உனக்கு மட்டும்தான் மனைவி, குழந்தைகள் இருக்கிறார்களா? எங்களுக்கெல்லாம் இல்லையா? என் குடும்பத்தினரை, தாய், தந்தையை, கட்சிக்காரர்களை நீ இழிவாகப் பேசவில்லையா?.
வா மோதிப் பார்த்து விடுவோம்
எத்தனை ஆண்டுகள் காக்கிச் சட்டை போடுவாய்? இறங்கித்தானே ஆக வேண்டும். பார்த்துப் பேசு தம்பி. மோதுவது என்று ஆகிவிட்டது. வா மோதிப் பார்த்து விடுவோம். After all நீ ஒரு ஐபிஎஸ்’’.
இவ்வாறு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாகச் சாடி உள்ளார்.