மதுரை மாநகர் அனுப்பானடி பாக்யாநகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருடைய மகளான கார்த்திகா (வயது 21) படிப்பை முடித்த நிலையில் காமராஜர் சாலை பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் ஒன்றில்  பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திகாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆனால் கார்த்திகாவிற்கு திருமணம் செய்வதில் விருப்பம் இல்லாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது.

 



 

இதனையடுத்து கடந்த இரு நாட்களாக கார்த்திகா வேலைக்கு செல்லாமல் வீட்டிலயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை (13-ஆம் தேதி) காலை கார்த்திகாவின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் தனிமையில் இருந்தபோது வீட்டில் அழுதுகொண்டே இருந்துள்ளார். இதனையடுத்து தனிமையில் இருந்த கார்த்திகா உடல் முழுவதிலும் மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 



 


 

அப்போது உடல் முழுவதிலும் தீப்பற்றியதில் உடல் முழுவதும் எரிந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அருகில் அளித்த தகவலில் பதறி அடித்து வீட்டிற்கு வந்த பெற்றோர் மகள் தற்கொலை செய்து கொண்டதை நினைத்து கதறி அழுதனர். திருமணம் செய்வதற்கான பெற்றோர் ஏற்பாடு செய்த நிலையில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.





மாநில உதவிமையம் : 104




சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050



 



 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர



யூடியூபில் வீடியோக்களை காண.