மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வில்லாணியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பள்ளி தலைமையாசிரியர் சின்னச்சாமி, இவர் 23 பவுன் நகை மற்றும் 4 லட்சம் முன் வைப்பு தொகைக்கான பாண்ட் ரசிது, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி புத்தகம் உள்ளிட்டவற்றை துணிப்பையில் வைத்து கொண்டு வங்கியில் லாக்கரில் வைப்பதற்காக இருசக்கர வாகனம் மூலம் உசிலம்பட்டி வருகை தந்துள்ளார்.,
இருசக்கர வாகனத்தில் வைத்து கொண்டு வரப்பட்ட துணிப்பை பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவில் கீழே தவறி விழுந்தது. இந்நிலையில் அவ்வழியாக காந்தி விடுதி அருகே குடியிருக்கும் நாகராஜ் என்ற முதியவர் நடந்து வந்த போது துணிப்பையை எடுத்து அதில் இருந்த மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புத்தகத்தை அடையாளமாக கொண்டு கூட்டுறவு வங்கிக்கு வந்து வங்கி மேலாளர் சிவக்குமாரிடம் 23 பவுன் நகை மற்றும் பாண்ட் ரசிதை ஒப்படைத்தார்.,
வங்கி மேலாளர் சிவக்குமார் தங்களது வாடிக்கையாளரும், நகையை தவறவிட்டு தேடிக் கொண்டிருந்தவருமான சின்னச்சாமியை அழைத்து அவரிடம் நகை மற்றும் பாண்ட் ரசிதை பத்திரமாக ஒப்படைத்தனர். கீழே கிடந்த 23 பவுன் நகை மற்றும் 4 லட்சத்திற்கான பாண்ட் ரசிதை வங்கியின் உதவியுடன் உரியவரிடம் ஒப்படைத்த முதியவர் நாகராஜ்-யை பலரும் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - அழகன்குளம் அகழ்வாய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்