கடந்த சில வாரமாக வடகிழக்கு பருவமழையால் பல்வேறு இடங்களில் நல்ல மழைப் பொழிவு இருந்தது. அதே போல் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் வைகை அணையில் 70 அடிக்கு மேல் முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் திறந்துவிடப்பட்டது.









மதுரை பகுதியில் 10 ஆயிரம் கனஅடி நீரானது ஆர்ப்பரித்து வந்தது . இந்நிலையில் மதுரை கோரிப்பாளையம் அருகே உள்ள தரைப் பாலம் முழுவதும் தண்ணீர் நிறைந்து சென்றது. இந்த சூழலில் இதில் இருந்து வெளியேறும் தண்ணீரானது சாலைகளை ஆக்கிரமித்தவாறு சென்றது. இந்த சூழலில் அங்கு பாதுகாப்பு பணியில் உதவி ஆய்வாளர் கல்யாண சுந்தரம் மற்றும் காவலர் ராமன் ஈடுபட்டிருந்தனர்.