திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலில், சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக திருவிழா காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவார்கள்.அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோவில் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.


5 State Election Result : ‘டிசம்பர் 3ஆம் தேதிக்காக காத்திருக்கும் கட்சிகள்’ காட்சிகள் மாறினால் கட்சிகளும் இடம் மாறுமா..?




இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று  பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.  உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து நேற்று எண்ணப்பட்டது. நேற்று முதல் நாள் எண்ணிக்கை முடிவில் ரொக்கம் ரூபாய் 2 கோடியே 58 இலட்சத்து 37 ஆயிரத்து 372 கிடைத்தது.


5 State Election Result : ‘டிசம்பர் 3ஆம் தேதிக்காக காத்திருக்கும் கட்சிகள்’ காட்சிகள் மாறினால் கட்சிகளும் இடம் மாறுமா..?




இந்த நிலையில் அதனை தொடர்ந்து இன்று 2-வது நாளாக உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் இதில்  நான்கு கோடி ஒரு லட்சத்து 68 ஆயிரத்து நானூற்று பத்து ரூபாய் ரொக்கமாகவும் தங்கமாக 1610 கிராமும்  வெள்ளியாக 15,752 கிராமும் வெளிநாட்டு கரன்சி 814 நோட்டுகளும் கிடைக்கப் பெற்றன.  உண்டியல் எண்ணிக்கையில் கோயில் பணியாளர்கள் வங்கி பணியாளர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உண்டியல் எண்ணும் பகுதியில் கண்காணிப்பு கேமரா மூலம் கவனிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.