உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வலியுறுத்தி மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டம் - கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

 

உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க அறிவிக்க வலியுறுத்தி சென்னையில் பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் வழக்கறிஞர்கள் மற்றும் சட்டகல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ்மொழியை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தியும் மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள்  நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 200-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக தமிழை உயர்நீதிமன்றங்களில் தமிழ்மொழியை வழக்காடு மொழியாக மத்திய அரசு அறிவிக்க  வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 

ஆர்ப்பாட்டத்தின் போது தமிழ்மொழியை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தியும், சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வழக்கறிஞர்கள் மற்றும் சட்டகல்லூரி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 


அதே போல் மதுரை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.