திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரு வண்ண கொடியின் வேஷ்டியை அணிந்து சென்றால் மாவட்ட ஆட்சியரே எழுந்து நிற்பார் என்று தேர்தல் பார்வையாளர் நாச்சிமுத்து பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது.


Minister Udhayanidhi Case: அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் மீதான சனாதன வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்




திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் எனும் முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழா நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நெல்லிக்குப்பம் புகழேந்தி மற்றும் தேர்தல் பார்வையாளர் நாச்சிமுத்து கலந்து கொண்டனர். அப்போது தேர்தல் பார்வையாளர் நாச்சிமுத்து பேசுகையில், “திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒரு கிளை கழகச் செயலாளருக்கு இருக்கிற அருகதை எந்த கட்சியிலும் கிடையாது என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன். ஒரு கிளை கழகச் செயலாளர் இரு வண்ணக் கொடியுடன் உள்ள வேஷ்டியை அணிந்து சென்றால் மாவட்ட ஆட்சியரே எழுந்து நிற்க வேண்டும் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


EPS Condemns CM Stalin: ’”நாங்கள் நலமாக இல்லை ஸ்டாலின்” - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்


மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் வாக்களித்த மக்களின் நிலை என்ன என்று சமூக ஆர்வலர்கள் கொந்தளித்து வருகின்றனர். இதற்குப் பின்னர் நெல்லிக்குப்பம் புகழேந்தி பேசுகையில், “நான் வாரியத் தலைவராக இருக்கிறேன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். இங்கே இருக்கும் பேரூராட்சித் தலைவர்கள் எம்எல்ஏ இருக்கிறார்கள் என்று கீழே இருப்பவர்களை பார்த்து உங்களுக்கு தெரிகிறது. ஆனால் ஒரு உண்மையை கூறுகிறேன் வாழ்க்கையில் எவன் உந்தன் பாவம் செய்கிறான் என்றால் வேட்பாளராக நிற்கிறவன் தான் ஆம்பளையால் இருக்கிறானே ஆப் அடித்து விட்டு அவன் ஓட்டை அவனே போடமாட்டான் ஆனால் என்னிடம் 50 ஓட்டுகள் எனக்கு இருக்கிறது என்று கூறுவான் அவனை எதிர்த்து பேச முடியாது. ஏனென்றால் அதாவது கலகத்தை இழுத்து விடுவான் நாங்கள் பெண்களை நம்பி தான் இருக்கிறோம் என்று பேசியது ஆண் வாக்காளர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது. நிதி நிலை அறிக்கை கூட்டம் என்று கூறிவிட்டு தொடர்ந்து இருவரும் சர்ச்சையாக பேசியது பொதுமக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.