செக்காணூரணி அருகே திருமணம் முடிந்த கையோடு தான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளையையும் புகுந்த வீட்டிற்கு மணமகள் அழைத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பல நூற்றாண்டு காலமாக தமிழர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை பாரம்பரியமாக விளையாடி வருகின்றன. இந்த ஜல்லிக்கட்டானது ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும். அதிலும், குறிப்பாக தென் மாவட்டங்களான பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், பேரையூர் போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகின்றன. 


UPSC Exam Results TN: யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள்; தமிழ்நாட்டில் இருந்து தேர்வானவர்கள் யார் யார்?- முழு விவரம்




ஜல்லிக்கட்டு காளையை வளர்ப்போர்கள் தங்களின் வீட்டில் ஒருவராக நினைத்து காளைகளை பராமரித்து வருவர். அப்படி பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பவர்களையும் காளைகளுக்கு அவர்கள் காட்டும் அன்பையும் நிறைய கேள்விப்பட்டிருப்போம் அப்படி காளையை தன்னுடன் வளர்ந்து வந்தவர் மதுரை அலங்கா நல்லூர் அருகே இருக்கும் அய்யங்கோட்டையை சேர்ந்த  சிவப்பிரியா என்ற இளம்பெண்.


CM Stalin Singapore Visit: 'சிங்கப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..' உற்சாக வரவேற்பு அளித்த இந்திய தூதர்..!


இவருக்கு  நேற்று திருமணமான நிலையில் தனது காளையை உடன் அழைத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அய்யங்கோட்டையைச் சேர்ந்த மணமகள் சிவப்பிரியா என்பவருக்கும், நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த மணமகன் ராஜபாண்டிக்கும் நேற்று 22.05.2023 அன்று செக்காணூரணியை அடுத்துள்ள நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் குடும்பத்தினர் முன்னிலையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த திருமண விழாவின் நாயகியான மணமகள் சிவப்பிரியா பொதுப்பணித்துறையில் பணியாற்றி வருவதோடு, பாரம்பரியம் மாறாமல் ஜல்லிக்கட்டு காளையையும் வளர்த்து வந்தாக கூறப்படுகிறது.,


BIS Hallmark Gold: மக்களே.. ஹால்மார்க் இல்லாத தங்க நகைகளை இனி விற்க முடியாது..! அப்போ என்ன பண்றது..?




Dimple Hayathi: போலீஸ் துணை கமிஷனர் காரையே எட்டி உதைத்த விஷால் பட ஹீரோயின்..! நடந்தது என்ன..?


நேற்று திருமணம் முடிந்த கையோடு தான் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளையையும் மணமகள் சிவப்பிரியா புகுந்த வீட்டிற்கு அழைத்து சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ஜல்லிக்கட்டு காளையை மணமேடையில் ஏற்றி மணமகனுக்கு அறிமுகம் செய்தனர். தொடர்ந்து மணமகனும், மணமகளும் ஜல்லிக்கட்டு காளைக்கு முத்தமிட்டு புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் சமீபத்தில் வெற்றி கிடைத்துள்ள சூழலில் பாரம்பரியம் மாறாது தான் வளர்த்த காளையை புகுந்த வீட்டிற்கு மணமகள் அழைத்துச் சென்றது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.




மேலும் செய்திகளை காண,ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண