UPSC Result 2022 Tamil Nadu: யூபிஎஸ்சி சார்பில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கு நடத்தப்பட்ட 2022ஆம் ஆண்டு தேர்வுக்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டில் இருந்து 40 பேர் தேர்வாகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 


இந்த நிலையில் 20222ஆம் ஆண்டுக்கான இந்தியக் குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதியன்று நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு செப்டம்பர் 16ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை முதன்மைத் தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வின் முடிவுகள் டிசம்பர் 6ஆம் தேதி அன்று
வெளியாகின. 


முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  2023ஆம் ஆண்டு மார்ச் 13 முதல் மே 18 வரை தலைநகர் டெல்லியில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (23.05.2023) அறிவிக்கப்பட்டன. இதில் 933 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், தமிழ்நாட்டில் இருந்து 40 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு  ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கு முதல்நிலை, முதன்மைத் தேர்வுகள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து நேர்காணலும் நடைபெற்றது. இந்த நிலையில் யூபிஎஸ்சி தேர்வுக்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் நான்கு இடங்களை பெண்களே பிடித்துள்ளனர். அதில் ஈஷிதா கிஷோர் என்பவர் முதல் இடத்தினைப் பிடித்துள்ளார். 


தேர்வர்கள் https://www.upsc.gov.in/FR-CSM-22-engl-230523.pdf என்ற இணையதள முகவரியை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளைக் காணலாம். 


இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வானவர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளன. இதன்படி, சென்னை, பெரம்பூரைச் சேர்ந்த ஜீ ஜீ என்னும் மாணவி, 107ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றவர் ஆவார். 


அதை அடுத்து, கோவில்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ண சாமி என்ற தேர்வர் யூபிஎஸ்சி தேர்வில் 117ஆவது இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். அதேபோல சென்னையைச் சேர்ந்த மதிவதனி ராவணன் என்ற தேர்வர், 447ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.  


குடியரசு என்னும் தேர்வர், 849ஆவது இடத்தைப்பிடித்துள்ளார். அருண் என்னும் தேர்வர் 436ஆம் இடத்தையும் , கார்த்திக் என்னும் தேர்வர்கள் 488ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். எழிலரசன் என்னும் தேர்வர் 523ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.


ஏற்கெனவே குடிமைப் பணியில் இருந்த குடியரசு என்னும் தேர்வர் 849ஆவது இடத்தையும் ராகுல் என்னும் தேர்வர் 858ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டில் இருந்து 40 பேர் தேர்வாகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 


இதையும் வாசிக்கலாம்: UPSC Exam Results: 2022 யூ.பி.எஸ்.சி. தேர்வு இறுதி முடிவுகள் வெளியீடு; 933 பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?