மதுரையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த மீனாட்சியம்மன் கோவில் தக்கார் மற்றும் தியாகராஜர் குழும தலைவருமான கருமுத்து கண்ணன் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், எம்பி கனிமொழி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவரது மகன் துரை வைகோ, சட்டமன்ற உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
மதுரையில் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி அளித்த பேட்டியில், “கருமுத்து கண்ணன் மறைவு கல்வித்துறைக்கு பேரிழப்பு. கல்வித்துறை வளர்ச்சிக்கு கருமுத்து கண்ணன் உதவிகரமாக இருந்துள்ளார் .ஏழை, எளிய மாணவர்கள் கல்வி கற்க உதவி புரிந்துள்ளார்” என்று கூறினார்.
கருமுத்து கண்ணன் உடலுக்கு கனிமொழி எம்.பி. அஞ்சலி.
கோச்சடை பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள கருமுத்து கண்ணன் உடலுக்கு கனிமொழி எம்.பி. நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து, மதுரையில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேட்டி: மதுரை மக்களின் அன்பையும் மரியதையும் பெற்றவர் கருமுத்து கண்ணன். அவரது இழப்பு அதிர்ச்சியை அளிக்கிறது. கருமுத்துக் கண்ணன் முன்னாள் முதல்வர் கலைஞர், தற்போதைய முதல்வர் மு.க ஸ்டாலினுடன் நெருக்கமாக இருந்தவர். நமது பாரம்பரிய கலை, மொழி மீது ஆர்வம் கொண்டு அதன் வளர்ச்சிக்கு பாடுபட்டவர். அவரை இழந்து வாடும் குடும்பதிற்கு, மதுரை மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
கருமுத்து கண்ணன் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி
கோச்சடை பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள கருமுத்து கண்ணன் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்தூ நேரில் அஞ்சலி செலுத்தினார்.
கண்ணீர் விட்டு அழுதபடி அஞ்சலி செலுத்தினார் வைகோ.
கருமுத்து கண்ணன் உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து வைகோ அழுதபடி மகன் ஹரி தியாகராஜனிடம் கருமுத்து கண்ணனுடனா நினைவுகளை தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்