மதுரை காக்கா தோப்பு பகுதியில் உள்ள பழமையான இரண்டு அடுக்கு கட்டடத்தின் மீது நேற்று நள்ளிரவில் பலத்த இடி விழுந்ததால் கட்டடம் முழுவதும் சரிந்து விழுந்து விபத்திற்குள்ளனது.

 

தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, நாகை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் தூத்துகுடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசாப மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 





 

வடகிழக்கு பருவமழை வலுபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கிய நிலையில் அக்டோபர் மாதம் வரை 49% மழை குறைவாக பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நவம்பர் மாதம் தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் அனேக பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.




 


தென்இந்தியப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை மாவட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் புதுச்சேரி,  காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.






வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் மதுரையில் தொடர்ந்து ஒரு வாரமாக மதுரை மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் நள்ளிரவு நேரங்களில் கனமழையானது பெய்து வருவதனால் நள்ளிரவு நேரங்களில் மதுரையில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில்




மதுரை காக்கா தோப்பு பகுதியில் உள்ள பழமையான இரண்டு அடுக்கு கட்டடத்தின் மீது நேற்று நள்ளிரவில் பலத்த இடி விழுந்ததால் கட்டடம் முழுவதும் சரிந்து விழுந்து விபத்திற்குள்ளனது. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. மேலும் கட்டடத்தின் உரிமையாளர்கள்  வெளிநாட்டில் வசிப்பதாகவும் ஆட்கள் இல்லாததாலும் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.