மதுரையில் பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு.  அளவை மீறி கொடுக்கப்பட்ட பவுடர் பாலால் மூச்சு திணறலா? என்ற கோணத்தில் தல்லாகுளம் காவல்துறை தீவிர விசாரணை.

 


மருத்துவர் பால் பவுடர் அளவை குறைத்துக் கொள்ளும்படி அறிவறுத்தியுள்ளனர்.

 


மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப்பட்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் - மகாலெட்சுமி  தம்பதியினருக்கு 2019- ஆம் ஆண்டு திருமணமான நிலையில் மூன்றரை வயது பெண் குழந்தை மற்றும்  2 மாத ஆண் குழந்தையுடன் வசித்துவந்துள்ளனர். 2-வது குழந்தை பிறந்த சிலமாதங்களே ஆன நிலையில் மகாலெட்சுமி தனது தாயாரின் வீடான மதுரை தல்லாகுளம் கமலாதெரு பகுதியில் 2 மாத குழந்தையுடன் இருந்துவந்துள்ளார். மகாலெட்சுமிக்கு  தாய்ப்பால் இல்லாத நிலையில் மருத்துவரின் ஆலோசனைப்படி  பவுடர் பால் மட்டுமே கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அரசு இராஜாஜி மருத்துமனைக்கு அழைத்து சென்றதாகவும், அப்போது அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பால் பவுடர் அளவை குறைத்துக் கொள்ளும்படி அறிவறுத்தியுள்ளனர்.

 


 

மருத்துவர் அறிவுறுத்தியதை மீறி அதிகளவிற்கு பவுடர் பால் கொடுக்கப்பட்டதா?

 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் குழந்தைக்கு பால் பவுடர் கொடுத்து தொட்டியில் தூங்க வைத்துள்ளார். பின்னர் 11 மணியளவில் குழந்தைக்கு திடிரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு அரசு இராஜாஜி மருத்துமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை வரும் வழியில் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து உயிரிழந்த குழந்தையின் உடல் உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

 

குழந்தையின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்

 

இது தொடர்பாக குழந்தையின் தந்தை சுரேஷ் என்பவர் அளித்த புகாரின் கீழ் தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பால்பவுடர் குடித்த 2 மாத குழந்தை மூச்சு திணறலால் உயிரிழந்த சம்பவத்தில் ஏற்கனவே மருத்துவர் அறிவுறுத்தியதை மீறி அதிகளவிற்கு பவுடர் பால் கொடுக்கப்பட்டதா? இல்லை வேறு ஏதேனும் காரணத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டதா என்பது குறித்து உடற்கூராய்வின் முடிவின் அறிக்கை முடிவிலயே தெரியவரும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.