மதுரையில் மிகவும் பழமை வாய்ந்த முத்தீஸ்வரர் கோயிலில் சிவபெருமானை சூரிய ஒளி கதிர்கள் தரிசிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனைக் காண ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர் பின் சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து தீபாராதனை நடந்தது.
சிவபெருமானை சூரிய ஒளி கதிர்கள் தரிசிக்கும் அரிய நிகழ்வு நடைபெற்றது.
மதுரையில் உள்ள மிகவும் பழமையான கோயில்களில் ஒன்று தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள முக்தீஸ்வரர் கோயில். இந்த கோயிலில் சிவபெருமானை சூரிய ஒளி கதிர்கள் தரிசிக்கும் அரிய நிகழ்வு நடைபெற்றது. முத்தீஸ்வரர் கோயில் சூரிய கதிர்கள் சிவனை தரிசிக்கும் அதிசயம் ஆண்டுக்கு இருமுறை நடைபெறும். துர்வாச முனிவர் சாபத்தில் இந்திரனின் ஐராவத யானை மதுரையின் இக்கோயிலில் சாபம் தீர்ந்ததும், இங்கேயே தங்கியது. இந்திரன் உத்தரவின் பேரில் யானையை கதிரவன் தேடி வந்து அழைத்து சென்றதாக ஐதீகம்.
ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்
ஒரு வருடத்தில் மார்ச், செப்டம்பர் மாதங்களில் குறிப்பிட்ட நாட்களில் சூரிய கதிர்கள் இக்கோயிலின் நந்தியில் பட்டு எதிரொலித்து மூலஸ்தானத்தில் உள்ள லிங்க வடிவில் உள்ள சிவனை தரிசிக்கும் அதிசயம் நடக்கும். இந்த வகையில் இந்தாண்டுக்கான இந்த நிகழ்வு செப்டம்பர் 20ஆம் தேதி நேற்று முன்தினம் துவங்கி துவங்கி 30ம் தேதி வரை காலை 6.15, 6.25 மணி மற்றும் 6.40 மணி முதல் 6.50 மணி வரை இந்த தரிசன அதிசயம் நடைபெறும்.
இதனைக் காண ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர் பின் சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து தீபாராதனை நடந்தது.
முக்தீஸ்ரர் கோயிலின் சிறப்புகள் என்ன தெரியுமா?
பொதுவாக சிவனின் ஆலயங்களில் வருடத்தில் சில வருடத்தில் சில விநாடிகள் மட்டும், சூரியன் தனது ஒளிக்கிரணங்களால் சுவாமியை பூஜை செய்வார், ஆனால், இந்த ஸ்தலத்தில் மார்ச் 10 முதல் 21 வரை, செப்டம்பர் 19 முதல் 30 வரையில், 24 நாட்கள் தொடர்ச்சியாக சூரியன் பூஜை செய்கிறார். இதனால் , இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது. இங்குள்ள தலவிநாயகர் சித்தி விநாயகர். இறந்தவர்களில் ஆத்மா சாந்திக்காக விநாயகர் சன்னதியில் வழிபாடு நடத்தலாம். இதன் காரணமாக அவர்கள் வேண்டிய ஆசையை நனவாக்கலாம், என்பது நம்பிக்கை. இதற்காக கோயிலில் உள்ள வில்வமரத்தடியில் விநாயகர் சன்னதியில் வழிபாடு நடத்தலாம். இந்த பிராத்தனைகள் நிறைவேறினால் 48- நாட்கள் நல்லெண்ணை விளக்கு ஏற்றி வழிபடலாம். மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள முக்தீஸ்வரர் கோயிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சிவபெருமானை சூரிய ஒளிக் கதிர்கள் தரிசிக்கும் நிகழ்வுவில் பலரும் கலந்துகொண்டனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - 500 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவில்; "அபிஷேகம் பார்த்தாலே நினைத்தது நடக்கும்"
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Spiritual Tour: இலவச ஆன்மீக சுற்றுலா.. பரவசத்தில் பக்தர்கள்.. இந்து அறநிலைத்துறையில் சூப்பர் திட்டம்..