மதுரை போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக மெட்ரோ அமையவுள்ளது. இது குறித்து ஏற்கனவே பல்வேறு கட்ட முடிவு எடுக்கப்பட்டு மண் பரிசோதனைகள் முடிவுற்றது. இந்நிலையில் ரயில்வே வழித்தடங்களில் சிக்கல் ஏற்படாமல் கட்டுமான பணிகளை மேற்கொள்வது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளுடன் ஆய்வு செய்து, ஆலோசித்தனர்.

 

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம்


மதுரையில் ரூ.11,360 கோடி மதிப்பில் 32 கிமீ தொலைவுக்கு அமையவுள்ள மெட்ரோ ரயில்வே திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசின் ஒப்புதலை எதிர்பார்த்திருக்கும் நிலையில், திட்டத்தின் செயலாக்கம் குறித்து மெட்ரோ ரயில்வேயின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் தலைமையில் தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 

 


 

திட்ட அறிக்கைக்கான ஒப்புதல் விரைவில் கிடைக்கவுள்ளது


மெட்ரோ வழித்தடம் அமையும் இடங்களில் உள்ள தெற்கு ரயில்வே வழித்தடங்களில் சிக்கல் ஏற்படாமல் கட்டுமான பணிகளை மேற்கொள்வது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசித்தனர். மதுரை ரயில் நிலையத்தில் உள்ள ராமேஸ்வரம் வழித்தடத்திலும், ஆண்டாள்புரத்தில் உள்ள விருதுநகர் வழித்தடத்திலும் சுரங்கம் மற்றும் மேம்பால கட்டுமானத்தின் நடைமுறை சாத்தியங்கள் குறித்து விவாதித்தனர். பின் மெட்ரோ ரயில்வே திட்ட இயக்குநர் அர்ச்சுனன் அளித்த பேட்டியில், “மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களின் விரிவான திட்ட அறிக்கைக்கான ஒப்புதல் விரைவில் கிடைக்கவுள்ளது. அதற்கு முன்னதாகவே தொய்வில்லாமல் பணிகளை மேற்கொள்வதற்காக தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.


 


 

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Viduthalai 2 Leaked : ஒரே நாளில் மொத்த படமும் ஆன்லைனில்..பைரசிக்கு இரையான விடுதலை 2