ராமேஸ்வரம் - ஹூப்ளி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு 


 

ராமேஸ்வரம் - ஹூப்ளி - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் டிசம்பர் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில்களின் சேவை ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹூப்ளி - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் (07355) ஜனவரி 4 முதல் ஜூன் 28 வரை ஹூப்ளியில் இருந்து சனிக்கிழமைகளில் காலை 06.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.15 மணிக்கு இராமேஸ்வரம் வந்து சேரும். மறு மார்க்கத்தில் ராமேஸ்வரம் - ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில் (07356) ஜனவரி 5 முதல் ஜூன் 29 வரை ராமேஸ்வரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 07.25 மணிக்கு ஹூப்ளி சென்று சேரும்.

 

சிவகங்கை ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்


 

இந்த ரயில்கள் ஹவேரி,  ராணி பெண்ணூர், ஹரிஹர், தேவாங்கீர், சிக்ஜாஜுர், பிரூர், அரிசிகரே, தும்கூர், யெஸ்வந்த்பூர், பனஸ்வாடி, ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, இராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதுவரை பயணிகளுக்கு வசதிக்காக கூடுதலாக சிவகங்கை ரயில் நிலையத்திலும் நின்று செல்லும். வைகை எக்ஸ்பிரஸ் மேல்மருவத்தூரில் நின்று செல்லும், மேல்மருவத்தூர் தைப்பூச இருமுடி திருவிழாவை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக மதுரை - சென்னை வைகை எக்ஸ்பிரஸ் (12636) டிசம்பர் 19 முதல் பிப்ரவரி 11 வரை மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும்.

ரயில்கள் ரத்து 


தவிர்க்க முடியாத காரணங்களினால் டிசம்பர் 26 மற்றும் 28 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து புறப்பட வேண்டிய ராமநாதபுரம் சிறப்பு ரயில் (06103) மற்றும் டிசம்பர் 27 மற்றும் 29 ஆகிய நாட்களில் ராமநாதபுரத்தில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட வேண்டியது தாம்பரம் சிறப்பு ரயில் (06104) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.