சித்திரைத் திருவிழா 2024
மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி மீனாட்சியம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்று, தினமும் மாசி வீதிகளில் வீதி உலா நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 19-ம் தேதி பட்டாபிஷேக நிகழ்ச்சியும், 20-ம் தேதி திக் விஜயம் நடைபெற்று. 21-ம் தேதி திருக்கல்யாணமும், 22-ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. 23-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். இந்த நிலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்கும் முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பிற்கும் விருந்து வைக்கும் வகையில் டன் கணக்கில் காய்கறிகள் நறுக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மன நிறைவான திருக்கல்யாண விருந்து
பழமுதிர்ச்சோலை திருவருள் டிரஸ்டி சார்பில் கடந்த 25 ஆண்டுகளாக மீனாட்சி திருக் கல்யாணத்திற்கு விருந்து வழங்கி வருகின்றனர். இந்தாண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சாப்பிடும் வகையில் உணவுகள் தயாரித்து வருகின்றனர். இது குறித்து பழமுதிர்ச்சோலை திருவருள் டிரஸ்ட் தலைவர் தண்டீஸ்வரன் நம்மிடம் பேசுகையில், " தொடர்ந்து ஆண்டு தோறும் எங்களுடைய டிரஸ்ட் நிர்வாகிகள் சார்பில் மீனாட்சி திரு கல்யாணத்திற்கும், முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பிற்கும் விருந்து வைக்கப்படுகிறது. இது பசியாற்றும் வகையில் மட்டும் இல்லாமல் பக்தர்களுக்கு மனம் நிறைவாக உணவளிக்க வேண்டும் என்பதற்காக சிறந்த முறையில் உணவுகளை தயாரித்து பக்தர்களுக்கு வழங்கி வருகிறோம். இந்தாண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சாப்பிட வேண்டும் என்பதற்காக உணவுகள் தயாராகி வருகிறது. கிட்டத்தட்ட ஆறு முதல் 12 டன் இருக்கும் உட்பட்ட காய்கறிகள் இங்கு வந்துள்ளது” என்றார்.
ஆயிரம் பெண்கள் காய்கறி நறுக்கும் பணியில்..
இதனை மதுரை பறவை மார்க்கெட் மற்றும் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் இருந்து சங்க நிர்வாகிகள் எங்களுக்கு காய்கறிகளை இலவசமாக வழங்கினார். அதே போல் கேஸ் அசோசியன் சார்பாக 75 சிலிண்டர்கள் எங்களுக்கு வழங்கினார்கள்.
இப்படி பல்வேறு அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் உதவியோடுதான் இந்த விருந்து எங்களால் வழங்க முடிகிறது. காய்கறி நறுக்குவதற்காக மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், சேவை செய்தனர். 400க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் இங்கு விருந்துக்கான சமையல்களை ஏற்பாடு செய்து வருகின்றனர். எனவே பக்தர்கள் இங்கு வந்து மன நிறைவாக உணவு உட்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Fishing festival: போர் வீரர்கள் போல் மீன்களை அள்ளிய சிவகங்கை மக்கள் - களைகட்டிய மீன்பிடி திருவிழா
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - TN Voting Percentage: தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு எவ்வளவு? வெளியானது தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை!