செல்போன் பாதுகாப்பு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீண்ட நேரம் காத்திருக்க கூடிய நிலையில் சில பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பிச் செல்லும் சூழல் உருவானது.
நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள் கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தமிழ் மாதங்களில் வழியே பல்வேறு திருவிழா முன்னெடுக்கப்படும். இதனால் தினமும் பல இடங்களில் இருந்து பக்தர்கள் அதிகளவு வந்து செல்கின்றனர். இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மொபைல் கலெக்சன் சென்டரில் கணினி கோளாறு ஏற்பட்டதால், நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள் கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பக்தர்கள் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து 2018 மார்ச் முதல் பக்தர்கள் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து பக்தர்களின் செல்போன்களை பாதுகாத்து பராமரிக்க கோயில் வளாகம் நுழைவாயில் பகுதிகளில் செல்போன் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டது. இதில் பத்து ரூபாய் செலுத்தி செல்போன்களை வைத்து விட்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏராளமான பக்தர்கள் செல்போனை பாதுகாப்பாக வழங்குவதற்காக நீண்ட நேரமாக காத்திருந்தனர்
இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் வருகைதந்தனர். இதனிடையே கோயில் கிழக்கு கோபுரம் அருகே அமைக்கப்பட்ட செல்போன் பாதுகாப்பு மையத்தில் திடீரென இரவு நேரத்தில் கணினி வேலை செய்யாமல் பழுது அடைந்ததால் பக்தர்களின் செல்போன்களை பெறுவதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இதனால் ஏராளமான பக்தர்கள் செல்போனை பாதுகாப்பாக வழங்குவதற்காக நீண்ட நேரமாக காத்திருந்தனர். நீண்ட நேரம் முயற்சித்தும் கணினி மற்றும் இணையதள கோளாறு காரணமாக நீண்ட நேரமாக செல்போனில் பெற முடியாத சூழல் ஏற்பட்டது.
சில பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பிச் செல்லும் சூழல் உருவானது
இதனையடுத்து தற்காலிகமாக டோக்கன்கள் வழங்கப்பட்டு செல்போன்கள் பாதுகாப்பான வாங்கி வைக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள் கோயிலுக்கு அவசரமாக வந்த நிலையில் செல்போன் பாதுகாப்பு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீண்ட நேரம் காத்திருக்க கூடிய நிலையில் சில பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பிச் செல்லும் சூழல் உருவானது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட 23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - காசி, ராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக தர்ப்பணம் செய்ய ஏன் திருப்புவனத்தில் கூட்டம் கூடுகிறது தெரியுமா?