நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டி மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு - லதா ரஜினிகாந்தின் மாங்கலய பாக்கியத்திற்காக பக்தர்களுக்கு மாங்கல்யம் பிரசாதமாக வழங்கி வழிபாடு செய்த ரஜினி ரசிகர்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று செப்டம்பர் 30 ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவர்களுடன் கலந்து ஆலோசித்து முன்கூட்டியே முடிவு செய்தபின்னர் நேற்று அவருக்கு சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், தற்போது வரை ரஜினியின் உடல்நிலை நிலையாக இருப்பதாகவும் அவரது நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகின. இருந்தும் மருத்துவமனை சார்பாகவும் ரஜினியின் மனைவி அல்லது மகள் சார்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத காரணத்தினால் ரசிகர்கள் பதற்றத்தில் இருந்து வந்தார்கள்.
- காசி, ராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக தர்ப்பணம் செய்ய ஏன் திருப்புவனத்தில் கூட்டம் கூடுகிறது தெரியுமா?
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ரஜினி பெயரில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
ரஜினியின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் இன்னும் இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவமனையில் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ரஜினி பெயரின் மீனாட்சியம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதியில் சிறப்பு பூஜை செய்தனர். அப்போது ஏராளமான ரசிகர்கள் மனமுருக வழிபட்டனர்.
மாங்கல்ய பாக்கியத்திற்காக மாங்கலயம் அடங்கிய பிரசாத பைகளை வழங்கினர்.
பின்னர் மீனாட்சி அம்மன் கோவில் வழிபட வந்த ஏராளமான பக்தர்களுக்கு ரஜினி விரைவில் பூரண குணமடைய வேண்டியும், லதா ரஜினிகாந்தின் மாங்கல்ய பாக்கியத்திற்காகவும் ரஜினி ரசிகர்கள் மாங்கலயம் அடங்கிய பிரசாத பைகளை வழங்கினர். மதுரை மாவட்ட தலைவர் அழகர்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ரஜினி ரசிகர்கள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
"தலைவர் நிரந்தரம்.." - ரஜினி ரசிகர் நம்பிக்கை
இது குறித்து ரஜினி ரசிகர்கள் கூறுகையில்...,” தலைவர் எப்போதும் நல்லா இருப்பார். ’ஆண்டவர் நல்லவர்களை கைவிட மாட்டார்’ - என்று எங்கள் தலைவரின் படத்திலேயே வசனங்கள் வரும், அது உண்மை தான். எனினும் தலைவர் நலம் பெற வேண்டு என தொடர்ந்து ஆலயங்களில் பூஜை செய்ய உள்ளோம். தற்போது மதுரை மீனாட்சியிடம் பூஜை செய்து வழிபட்டோம். தலைவரின் பெயரைச் சொல்லி மாங்கல்யங்களையும் வழங்கினோம். இது மனதிற்கு திருப்த்தி அளிக்கிறது. வீடு திரும்பிய பின் அவரின் கம்பீர குரலையும், அவரின் ஸ்டெயிலும் மாறமல் மக்கள் மத்தியில் நிலைத்திருப்பார்” என தெரிவித்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மஹாளய அமாவாசை: தேனி, திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க குவிந்த மக்கள்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - IAS Officers Transfer: துணை முதல்வர் தனிச்செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்; 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்- முழு லிஸ்ட்!