மீனாட்சியம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் 4- ஆம் நாள் நிகழ்வாக சிவபெருமானின், திருவிளையாடலான தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் மாதங்களில் வழியே பல்வேறு திருவிழா
பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்தே மதுரை மாநகர் நிர்மாணிக்கப்படுகிறது. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரையின் நடுவிலும் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. தமிழ் மாதங்களில் வழியே பல்வேறு திருவிழா முன்னெடுக்கப்படும். இந்நிலையில் மீனாட்சியம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் 4- ஆம் நாள் நிகழ்வு நடைபெற்றது. இதில் சிவபெருமானின், திருவிளையாடலான தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை நிகழ்வு நடைபெறும் .
மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் விழாவின் 4 ஆம் நாள் நிகழ்வான சிவபெருமானின் திருவிளையாடல்களில் ஒன்றான தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை நடைபெற்றது. ”செண்பக பாண்டிய மன்னன் அறிவித்த பொற்கிழியை தருமி பெறுவதற்காக முயற்சிப்பார். பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டு. என்பதை கூறும், ஓலையை கொடுத்து அதனை வாசித்து, தருமி பொற்கிழியை பெறவைத்து தருமியின் கூற்றை மறுத்த நக்கீரரின் ஆணவத்தை, சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணால் சுட்டு பொற்றாமரை குளத்தில் விழச்செய்து, ஆணவ குணத்தை அழித்த” - திருவிளையாடலை எடுத்துரைக்கும் வகையில் தருமிக்கு பொற்கிழி அளித்த லீலையானது நடைபெற்றது.
அலங்காரத்தில் கையில் ஓலையுடன் காட்சி
அப்போது திருவிளையாடலை எடுத்துரைக்கும் வகையிலான அலங்காரத்தில் கையில் ஓலையுடன் பிரியாவிடையுடன், கையில் ஓலையை வைத்தபடி சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளி காட்சி அளித்தனர். முன்னதாக சுவாமிக்கும் அம்மனுக்கும் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. ஆவணி திருவிழாவில் நான்காம் நாள் நிகழ்வை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை
இது குறித்து சாமி தரிசனம் செய்த பெண் பக்தர் புவனேஸ்வரி, "கஷ்ட, நஷ்டம் ஏற்பட்டால் மீனாட்சி தாயிடம் தான் வழிபடுவேன். தற்போது ஆவணி திருவிழாவில் கலந்துகொண்டது மனநிறைவாக உள்ளது. சிவபெருமானின், திருவிளையாடலான தருமிக்கு பொற்கிழி அளித்த லீலையினை பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Book Fair 2024: புத்தகத் திருவிழாவில் பக்திபாடல்: பள்ளி மாணவிகள் சாமியாடி மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - எங்கள் அன்பு முதல்வா.. பள்ளிக்கூடம் கட்டி தாங்க... கொடை ரோடு அரசு பள்ளி மாணவர்கள் பாடல் வைரல்