அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க., தொண்டர்கள் சார்பில் மூன்று நாட்களும் பல்வேறு இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
உதயநிதி ஸ்டாலினுக்கு மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 3 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதற்காக நேற்று இரவு விமானம் மூலம் மதுரை வருகை தந்த நிலையில், அமைச்சர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மதுரை மாநகர் பகுதியில் இரவு ஓய்வு எடுத்துக் கொண்டார்.
இன்று 9.9.2024 மதுரையில் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் விபரம்
மதுரை யா.ஒத்தக்கடை பகுதியில் காலை 10.30 மணியளவில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். மாலை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டு அரங்கில் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் அரசுத் துறை சார்ந்த அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளுக்கு, இடைப்பட்ட நேரத்தில் திருமுகூர் சாலை மற்றும் எஸ்.எஸ் காலனி பகுதியில் கலைஞர் நூலகங்களை திறந்து வைக்கிறார். பாரா ஒலிம்பிக் விளையாட்டு வீரர் மனோஜை அச்சம்பத்து வீட்டில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.
நாளை 10.9.2024 சிவகங்கை மறுநாள் ராமநாதபுரம்
நாளை 10ம் தேதி காலை 10.00 மணி அளவில் சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைக்கிறார். காலை.10.30 மணிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் மாவட்ட அளவில் நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார்.
மதியம் 1 மணியளவில் காளையார் கோவில் தாலுகா நகரம்பட்டியில் நடைபெற்று வரும் சுதந்திர போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் நினைவு மண்டபம் கட்டிடப் பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். அதனைத் தொடர்ந்து சிராவயலில் நடைபெற்று வரும் அண்ணல் காந்தி ஜீவா நினைவு மண்டபம் கட்டிடப் பணிகளை ஆய்வு செய்கிறார். மாலை 4:30 மணிக்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாக அரங்கில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். மாலை 6.00மணிக்கு கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிடுகிறார். இரவு மதுரையில் மீண்டும் விடுதியில் தங்குகிறார். இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் 11-ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்வில் கலந்து கொள்கிறார்.
மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ள நிலையில் பல்வேறு துறை அதிகாரிகளும் தங்களது அலுவலகங்களுக்கு திடீர் விசிட் அடிக்கப்படும் என எச்சரிக்கையாக இருந்து வருகின்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - GST Credt Card: கிரெடிட்/டெபிட் கார்ட் பயனர்களுக்கு ஆப்பு - ரூ.2000-க்கு 18% ஜிஎஸ்டி வரி, மத்திய அரசின் அதிரடி திட்டம்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - TVK ; ”தவெக” வுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்! மதுரையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம் !