எங்கள் அன்பு முதல்வா.. பள்ளிக்கூடம் கட்டி தாங்க.. கொடைரோடு அருகே இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை கட்டித்தர வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் பாடிய பாடல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் அரசு பள்ளிகளின் கட்டிடங்கள், பள்ளி வகுப்பறைகள், பள்ளியின் வளாகங்கள் மிகவும் சிதலமடைந்து இருக்கக்கூடிய காட்சிகளை பல்வேறு இடங்களில் காண முடியும். அது மட்டுமல்லாமல் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளை சீரமைக்கவும் , அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கவும் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.


Ganesh Chaturthi Pooja: சினிமா பிரபலம் முதல் அரசியல்வாதிகள் வரை பிள்ளையார்பட்டியில் சாமி தரிசனம்!




குறிப்பாக கிராமபுர பகுதிகளில் உள்ள பிற்படுத்த பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் வளர்ச்சிக்கு தமிழக அரசு பள்ளி கல்வித்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பல்வேறு இடங்களில் தற்போது வரை அரசு பள்ளிகளின் நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்து வருவதாக ஆங்காங்கே புகார்களும் எழுந்து வருவது தொடர்கிறதாகி வருகிறது.


Paris Paralympics 2024: பாரீஸ் பாராலிம்பிக்.. இந்தியா விளையாடும் போட்டிகள் என்ன? பதக்க வாய்ப்பு உள்ளதா?




இந்த நிலையில்தான் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே அம்மைய நாயக்கனூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் இடிக்கப்பட்ட கட்டிடத்தை கட்டி தர வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து மனமுருகி பாடிய பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அம்மையநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்து வகுப்புகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர் .




இந்நிலையில் பள்ளியின் நான்கு வகுப்பறைகள் பழுதடைந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வகுப்பறை கட்டிடங்கள் புதிதாக கட்டுவதற்காக இடிக்கப்பட்டது . தற்போது வகுப்பறை கட்டிடம் இடிக்கப்பட்டு ஓராண்டு வரப்போகும் நிலையில் பள்ளி வகுப்பறை கட்டிடம்  கட்டித் தரப்படவில்லை . இடப்பற்றாக்குறையால் பள்ளி மாணவர்கள் மரத்தடியில் படித்து வரும் சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் மீண்டும் மழை காலம் தொடங்க உள்ள நிலையில் தங்களுக்கு வகுப்பறை கட்டிடம் கட்டித் தர வலியுறுத்தி,


Madurai Book Fair 2024: புத்தகத் திருவிழாவில் பக்திபாடல்: பள்ளி மாணவிகள் சாமியாடி மயங்கி விழுந்ததால் பரபரப்பு!




பக்தி பாடல் பாணியில் அன்பு தமிழக முதல்வா... பள்ளிக்கூடம் கட்டி தாங்க.. மழைக்காலம் வர இருக்கின்றதே.. என்று தொடங்கி காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கி பள்ளி கல்வித்துறையில் தமிழக முதல்வர் கொண்டு வந்த சாதனை திட்டங்களுக்கு நன்றி கூறியும், தங்களுக்கு வகுப்பறை கட்டிடம் கட்டித் தர வலியுறுத்தியும்  தமிழக முதல்வருக்கு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து வேண்டுகோள் விடுத்து உருக்கமாக பாடிய பாடல் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.