மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் மல்லி கிலோ ரூ.2,500ஆக உயர்ந்துள்ளது.
இன்று பிறந்தது மார்கழி:
கார்த்திகை மாதம் நேற்றுடன் நிறைவடைந்தது, மார்கழி மாதம் இன்று பிறந்தது. மார்கழி மாதம் பிறப்பை முன்னிட்டு வைணவ தலங்கள் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. புராணங்களின்படி, மனிதர்களுக்கான ஒரு ஆண்டு காலம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாக கணக்கிடப்படுகிறது. இதன்படி, தை மாதம் முதல் ஆனி மாதம் வடையில் காலை முதல் பகலாகவும், ஆடி முதல் மார்கழி வரை இரவு முதல் அதிகாலை வரையிலான காலமாகவும் தேவர்களுக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது. அதிகாலைப் பொழுதாக வரும் மார்கழி மாதம் இதன் காரணமாகவே தனிச்சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. மேலும், இதன் காரணமாகவே அதிகாலை நேரமான 4 மணி முதல் 6 மணி வரையிலான முகூர்த்த நேரத்தை பிரம்ம முகூர்த்தம் என்று கூறுகின்றனர். இப்படி பல்வேறு அம்சங்களை கொண்ட மார்கழி மாதத்தில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் மல்லி கிலோ ரூ.2,500ஆக உயர்ந்துள்ளது.
பூக்களின் விலை நிலவரம்
மார்கழி மாதம் துவங்கியநிலையில் பனிப்பொழிவு காரணமாகவும் பூக்களின் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது. இதனால் மலர் சந்தைக்கு பூக்களின் வரத்தும் குறைந்துள்ளது. குறிப்பாக, மதுரை மல்லி கிலோ ரூ.2,500, மெட்ராஸ் மல்லி ரூ.700, பிச்சி ரூ.1000, முல்லை ரூ.800, செவ்வந்தி ரூ.180, சம்பங்கி ரூ.200, செண்டு மல்லி ரூ.100, கனகாம்பரம் ரூ.1,000, ரோஸ் ரூ.250, பட்டன் ரோஸ் ரூ.300, பன்னீர் ரோஸ் ரூ.300, கோழிக்கொண்டை ரூ.120, அரளி ரூ.600, தாமரை (ஒன்றுக்கு) ரூ.25 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது” என மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் தகவல் தெரிவித்துள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - "கருவறைக்குள் வராதீங்க” வாசலிலே நிறுத்தப்பட்ட இளையராஜா - ஆண்டாள் கோயிலில் பரபரப்பு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?