திருமா அண்ணனின் விமர்சனத்தை அட்வைஸாக பார்க்கிறேன், சென்னை விமான நிலையத்தில் ஆதவ் அர்ஜுனா பேட்டி


விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தலைவர் திருமாவளவன் வார்த்தைகளுக்கு நான் கட்டுப்படுபவன், அவரின் வாழ்த்துக்களையும் அன்பையும் அட்வைஸும் எடுத்துக் கொண்டு அவருடன் பயணிப்பேன்” என்றார்.


வேல்முருகனையும் சங்கி எனக்கூறுவார்கள்


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கொடுப்பதில் தமிழக அரசு பாரபட்சம் காட்டுகிறது என தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் கூறியதை பற்றி கேட்டதற்கு, இன்னும் கொஞ்சம் நாளில் அவரையும் சங்கி என சொல்லிவிடுவார்கள் என்றார்.


சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் கருத்திற்கு நான் உடன்படுகிறேன், குறைந்தபட்சம் செயல் திட்டத்தை உருவாக்கி எதிர்காலத்தில் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பதை வைத்து கொள்கை தலைவர்கள் புதிய அரசியலை உருவாக்க வேண்டும் என்பது எனது குறிக்கோளாக இருந்தது அதை பேசியதற்கு எனக்கு பனிஷ்மென்ட் கிடைத்தது, இந்தக் கொள்கையை எனது பயண பிரச்சாரத்தில் உருவாக்குவேன்.


அண்ணனின் விமர்சனம் அட்வைஸ் ஆக பார்க்கிறேன்


திருமா அண்ணனின் விமர்சனத்தை எனக்கு அட்வைஸாக பார்க்கிறேன், கள அரசியல்களை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டே, எனக்கு அவர் எப்போதும் ஆசான், கொள்கை சார்ந்த அரசியலில் அவருடன் எப்போதும் எனது பயணம் இருக்கும். இன்றைக்கு எந்த கட்சியில் இணைவு என்பதை விட என்ன செய்ய வேண்டும் என்பதை தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன்,விடுதலை சிறுத்தைகள் கட்சியில் என்னுடன் பயணித்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


சாம்சங் தொழிலாளர்கள் உடன் இணைந்து போராடினால் நக்சலைட் என்பார்கள், மழை வெள்ளத்தில் மக்களுக்கு சாப்பாடு கிடைக்கவில்லை என்றால் சங்கி என சொல்வார்கள், என் மீது ஏற்படும் சந்தேகங்களுக்கு என் பயணத்தின் மூலம் தான் பதில் சொல்லப்படும்.


மக்கள் நம்பிக்கை கிடைக்கும்


பெரியார், அம்பேத்கர் மீது பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டபோது, அவர்கள் வாழ்க்கை பணத்தின் மூலம்தான் பதில் சொன்னார்கள் விமர்சனம் செய்பவர்களுக்கு பதில் சொல்லாமல் நம்முடைய பயணத்தின் மூலம் பெரியார், அம்பேத்கர் கருத்துக்களையும் அண்ணா அவர்களின் தேர்தல் அரசியலையும் கொண்டு ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கும்போது மக்களின் நம்பிக்கை முழுவதமாக எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன். எதிர்கால பயணம் குறித்து கூடிய விரைவில் செய்தியாளர்களை சந்தித்து கண்டிப்பாக சொல்கிறேன். இவ்வாறு கூறினார்.


திருமாவளவன் கூறியது என்ன ?


முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் கூறுகையில்,


ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் எங்கள் குறித்து கருத்து கூறுவதே தவறு. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க கூடாது என்று எனக்கு யாரும் அழுத்தம் தரவில்லை. எந்த அழுத்தத்தாலும் என்னை இணங்க வைக்க முடியாது. நான் அது சுதந்திரமாக எடுத்த முடிவுதான்.


விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவர் தொடர்ந்து இப்படிப் பேசி வருவது அவருக்கு என்னவோ ஒரு மறைமுக செயல் திட்டம் இருப்பதாக தெரிகிறது.