தேனி மாவட்டம் முல்லை பெரியாற்றில் இருந்து 18 ம் கால்வாய் வழியாக ஒரு போக பாசன வசதிக்காக இன்று  நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜிவனா ஆகியோர் தண்ணீரினை திறந்து வைத்தார்கள். தண்ணீர் திறக்க காலதாமதம் ஏற்பட்டதால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் சுரங்கனாறு நீர்வீழ்ச்சி தண்ணீரினை பதினெட்டாம் கால்வாயோடு தடுப்பணை கட்டி இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினரிடம் வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர்.




18ம் கால்வாயில் தண்ணீர்திறப்பு


தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள மழை மறைவு பகுதியாக உள்ள கோம்பை, பண்ணைபுரம், தேவாரம் உள்ளிட்ட 26 கிராமங்களில் இரண்டு லட்சம் ஏக்கர் நிலங்கள் மானாவாரி நிலங்களாக நிலத்தடி நீர் என்னை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்தும் விதமாக அமைக்கப்பட்ட பதினெட்டாம் கால்வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையினை ஏற்று இன்று தமிழக முதல்வர் உத்தரவின் பெயரில் முல்லை பெரியாற்றிலிருந்து 18 ம் கால்வாயில் தேனி மாவட்ட ஆட்சியர்  ஷஜீவனா தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் முல்லைப் பெரியாற்றில் இருந்து நாள் ஒன்றுக்கு 98 கன அடி வீதம் 30 நாட்களுக்கு தண்ணீரை திறந்து வைத்தார்கள்.


அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!




இந்த தண்ணீர் திறப்பதன் மூலம் தேவாரம் பகுதியில் 44 கண்மாய்கள் மூலம் 4614. 25 ஏக்கர் பாசன பரப்பு நிலங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாசன வசதி பெறும், மேலும் உத்தமபாளையம் தாலுகாவில் 21 கண்மாய்கள் வாயிலாக 2045.35 ஏக்கர் பாசன பரப்பு நிலங்கள் மற்றும் போடிநாயக்கனூர் தாலுகாவில் உள்ள நீட்டிப்பு கால்வாய் மூலம் 23 கண்மாய்கள் வாயிலாக 2568.90 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறுகின்றன. இந்த நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், 18- ஆம் கால்வாய் விவசாயிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். காலை 11:30 மணிக்கு தண்ணீர் திறப்பதாக விவசாய சங்கங்களுக்கும் விவசாயிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பாக தகவல் தெரிவித்து விழாவினை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.


மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!




சம்பவ இடத்திற்கு வருகை தந்த விவசாயிகள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தும் மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வருவதற்கு காலதாமதப்படுத்தியதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்து விழாவை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து காலதாமதமாக அங்கு வந்து தண்ணீர் திறந்து வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா ஆகியோரிடம்  விவசாய சங்கத்தினர்கள் 18 ஆம் கால்வாய் மூலம் நிரந்தர தண்ணீர் வசதி பெறுவதற்காக சுரங்கநார் நீர்வீழ்ச்சியிலிருந்து வரும் தண்ணீரினை தடுப்பணை கட்டி 18ம் கால்வாயுடன் இணைக்க வலியுறுத்தி கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கால்வாயுடன் சுரங்கநாறு நீர் வீழ்ச்சி தண்ணீரினை இணைப்பதற்கு வனத்துறையினர் தடை விதிப்பதாகவும் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தெரிவித்தார்.