பி.ஜே.பி., ஓ.பி.சி. அணி மாநில. பொதுச் செயலாளர் சூர்யா சிவா (எம்.பி. திருச்சி சிவா) மகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு.
இப்பொழுது எல்லாம் ஒருவர் இரண்டு போலீஸ் பாதுகாப்பு வைத்துக் கொள்வது பேஷனாக மாறிவிட்டது நீதிபதி கருத்து. அரசு வழக்கறிஞர் நம்பிசெல்வன் ஆஜராகி, மனுதாரர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடியாது என எதிர்ப்பு. அரசு தரப்பு வாதத்தை ஏற்று மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
பி.ஜே.பி., ஓ.பி.சி. அணி மாநில. பொதுச் செயலாளர் சூர்யா சிவா, ‘எனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். நான் பா.ஜனதாவில் ஓ.பி.சி. அணி மாநில. பொதுச்செயலாளர் உள்ளேன். இங்கு சேர்ந்தது முதல் இப்போது வரை செல்போன் மூலமாகவும், நேரடியாகவும் பலர் என்னை மிரட்டி வருகின்றனர். கடந்த சில மாதத்துக்கு முன்பு கூட என்னுடைய கார் மீது பஸ்சை மோதச்செய்து என்னை கொல்ல முயன்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர். பொதுமக்கள் சேவைக்காகவும், கட்சி பணிக்காகவும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். இந்த சூழ்நிலையில் தற்போது சிலர் என்னை பின்தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றனர். அவர்களுடைய நடவடிக்கைகள் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி தண்டபாணி முன்பு விசாரித்தார். அப்போது அரசு வழக்கறிஞர். நம்பிசெல்வன் ஆஜராகி, மனுதாரர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடியாது இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். அப்பொழுது நீதிபதி, மனுதாரர் யார் என்பது நீதிமன்றத்திற்கு நன்றாகவே தெரியும். மனுதாரருக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்க முடியும். இப்பொழுது எல்லாம் ஒருவர் இரண்டு போலீஸ் பாதுகாப்பு வைத்துக் கொள்வது பேஷனாக மாறிவிட்டது என கூறினார். சூர்யா சிவா தரப்பு வழக்கறிஞர் போலீஸ் பாதுகாப்பு கூறிய மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரையில் பாஜக மாவட்ட செயலாளர் வெட்டிக்கொலை - உண்மை குற்றவாளிகளை கைது செய்ய ஆர்ப்பாட்டம்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - CM Stalin: "சாமானியனின் நம்பிக்கையை உறுதி செய்துள்ளது" தேர்தல் பத்திரம் ரத்து குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு!