உரிய விதிமுறைகளைப் பின்பற்றி கிடா முட்டு விளையாட்டு நடத்த அனுமதிக்க மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


கிடா முட்டு விளையாட்டு


இதுதொடர்பாக மதுரை  ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டில் ஒன்றான கிடா முட்டு விளையாட்டானது வருடம் தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும். கிடாக்களை முறையாக பயிற்சி செய்து கிடா முட்டு விளையாட்டிற்கு  தயார் செய்வார்கள். அந்த வகையில் மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள வாலாந்தூர் கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில் திருவிழாவை முன்னிட்டு வருகிற மே 16 ம் தேதி கிடா முட்டு விளையாட்டு நடத்த உள்ளோம். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி விண்ணப்பிக்கப்பட்டது. இதுவரை அனுமதி கொடுக்கவில்லை. எனவே உரிய விதிகளை பின்பற்றி கிடா முட்டு விளையாட்டு நடத்துவதற்கு அனுமதிக்க அதிகாரிகளுக்கு உத்திரவிட வேண்டும்’ என தனது மனுவில் கூறியிருந்தார்.


விதிகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும்



இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கிடா முட்டு விளையாட்டிற்கான விதிகளை பின்பற்றி உரிய பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்து அனுமதி வழங்க மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் உசிலம்பட்டி தாசில்தாருக்கு உத்திரவிட்ட நீதிபதி, மேலும் அதிகாரிகள் வகுக்கும் விதிகளை உரிய முறையில் பின்பற்ற மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Durai Vaiko : “திமுகவிற்கும் மதிமுகவிற்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சி” கொந்தளிக்கும் மதிமுக தொண்டர்கள்..!


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Summer Camp: தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சார்பில் கோடைகால பயிற்சி முகாம் அறிவிப்பு.. விவரம் இதோ..