சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து;
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மருவத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் என்பவரது மகன் 33 வயதான விஜய். இவர் கடந்த 11-ம் தேதி மாமல்லபுரம் திருவிடந்தை பகுதியில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு மாநாட்டில் பங்கேற்க கட்சியினருடன் வேனில் புறப்பட்டு சென்றனர். அவர்கள் சென்ற வேன் சீர்காழி அருகே அட்டகுளம் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பாமக தொண்டர் உயிரிழப்பு
இந்த விபத்தில் விஜய் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்து சீர்காழி அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டனர். இதில் விஜய் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், அதில் சிகிச்சை பலனின்றி விஜய் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் விபத்தில் இறந்த விஜயின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் வருகை புரிந்தார்.
ஏசி ஒர்க் ஆகல.. ஏர் இந்தியா விமானத்தால் கடுப்பான பயணிகள்.. இனியும் பொறுக்க முடியாது
அன்புமணி ராமதாஸ் நேரில் ஆறுதல்
தொடர்ந்து விஜயின் பெற்றோரை சந்தித்து அன்புமணி ராமதாஸ் ஆறுதல் கூறினார். மேலும் வெளிநாட்டில் உள்ள விஜயின் சகோதரரை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு அவருக்கும் ஆறுதல் கூறிய அன்புமணி ராமதாஸ் விஜயின் பெற்றோரிடம் 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். மேலும் அவரது சகோதரருக்கு அரசு வேலை பெற்று தர முயற்சி செய்வதாகவும் உறுதி அளித்தார். அதனைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;
பொள்ளாச்சி வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு வரவேற்பு தக்கது. ஆனால், ஆறாண்டு காலம் இந்த தீர்ப்பிற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது வருத்தம் அளிப்பதாக உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கியுள்ள நிதி போதுமானதாக இல்லை, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 1 கோடி ரூபாய் வரை நிதி வழங்க அரசு முன் வர வேண்டும். இது போன்ற வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் இல்லை என்பதால் தாமதமாக தீர்ப்பு வந்துள்ளது. இந்த தீர்பை நாங்கள் வரவேற்கிறோம்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும்
பெண்களுக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தளில் யாரும் ஈடுபடக் கூடாது என்பதை இந்த தீர்ப்பு தெளிவாக கூறுகிறது. பெண்கள் தைரியமாக வெளியே செல்ல முடியாத சூழல் உள்ளது. எனவே தமிழக அரசு பெண்களுக்கு எதிரான கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும் மது கலாச்சாரத்தை கொண்டு வந்தது ஆளும் கட்சியும் திராவிட கட்சிகளும் தான் எனக்கு கூறினார்
முக்கிய நிர்வாகிகள்
இந்நிகாழ்வில் ட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, மாநில நிர்வாகிகள் ஐயப்பன், செந்தில் முருகன், இளைஞர் சங்க நிர்வாகி முருகவேல், நகர செயலாளர் வேல்முருகன்,ஒன்றிய செயலாளர் குமார், தியாகராஜன், பாரி உட்பட பலர் உடன் இருந்தனர்.