டெங்கு கொசு உருவாகும் வகையில் சுகாதாரற்ற முறையில் வளாகங்களை வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.


மதுரை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கையாக டெங்கு காய்ச்சல் கொசுக்கள் பரவும் இடத்தை கண்டறிந்து டெங்கு கொசுக்கள் பரவுவதற்கு காரணமாக உள்ள இடங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மண்டலம் 1க்கு உட்பட்ட பகுதிகளில் 94 கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில்  109 பழைய டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3700 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மண்டலம் 2 க்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 38 கடைகளில் ஆய்வு தேவையற்ற 83 டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டு 7ஆயிரத்தி 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


- Redin Kingsley: அட.. பிஸ்னஸ் மேனாகவும் கலக்கும் ரெடின் கிங்ஸ்லி.. சொத்து மதிப்பு இவ்வளவா!





மண்டலம் 3 க்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 87 கடைகளில் ஆய்வு தேவையற்ற 125 டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டு  ரூ.4 ஆயிரத்தி 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மண்டலம் 4க்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 89 கடைகளில் ஆய்வு தேவையற்ற 181 டயர்கள் பறிமுதல்,  ரூ.2 ஆயிரம் ரூபாய்  அபராதம் விதிப்பு. மண்டலம் 5க்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 106 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் 81 டயர்கள் பறிமுதல்,  ரூ.6ஆயிரத்தி 500 ரூபாய் அபராதம் விதிப்பு. மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் 5  மண்டலங்களில் இருந்து மொத்தம் 414 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் 579 தேவையற்ற டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டு மொத்தம் 24 ஆயிரத்தி 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் இருப்பது கண்டறியப்பட்டால் மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்படுவதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சார்பில்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும் சென்னை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Cyclone Michaung: ”சென்னையில் 80 சதவீதம் மின் விநியோகம் சரி செய்யப்பட்டுள்ளது" - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா