மருத்துவம், பொறியியல், இதர தொழில் படிப்புகள், கலை, அறிவியல் மற்றும் பிற படிப்புகளுக்கு வங்கியில் கல்விக்கடன் பெறுவதற்கு மாணவ / மாணவியர் விண்ணப்பிக்கலாம்.
மதுரை மாவட்டத்தில் ஆறாம் ஆண்டு கல்விக் கடன் திருவிழா
மதுரை மாவட்ட நிர்வாகம், வங்கி நிர்வாகம் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகமும் இணைந்து மாவட்ட அளவிலான மாபெரும் கல்வி கடன் முகாம் இன்று 29.08.2024 (வியாழக்கிழமை) காலை 09.00 மணி முதல் மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 500 கோடி கல்விக்கடன் கொடுத்து சாதனை படைத்த மாவட்டமாக மதுரை மாவட்டம் திகழ்ந்தது.
வங்கிகள் கல்விக்கடன் வழங்குகின்றனர்
அந்த சாதனை வரிசை இந்த ஆண்டும் தொடர்கிறது. மருத்துவம், பொறியியல் மற்றும் இதர தொழில் படிப்புகளுக்கு முறையே தேசிய தகுதித்திறன் மற்றும் நுழைவுத்தேர்வு பொறியியல் கலந்தாய்வு, இதர நுழைவுத்தேர்வு மற்றும் நேரடியாக கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் வங்கிகள் கல்விக்கடன் வழங்குகின்றன.
கல்விக் கடன் வாங்க என்ன செய்ய வேண்டும்
மேலும் அவர்களது குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 4,50,000/-க்குள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் வாங்கிய கல்விக்கடனில் அதிகபட்சமாக ரூ.10,00,000/- வரையிலான கடன் கணக்கில் கொள்ளப்பட்டு அதற்குரிய வட்டி படிக்கும் காலங்களுக்கு முழுமையாக மானியமாக வழங்கப்படுகிறது. மருத்துவம், பொறியியல், இதர தொழில் படிப்புகள், கலை, அறிவியல் மற்றும் பிற படிப்புகளுக்கு வங்கியில் கல்விக்கடன் பெறுவதற்கு www.vidyalakshmi.co.in என்ற இணையதளம் வாயிலாக மாணவ / மாணவியர் விண்ணப்பிக்கலாம்.
மேற்படி முகாமிற்கு தேவையான ஆவணங்கள்:
. ஆதார் அட்டை
. கல்வி தகுதி 10/12-ம் வகுப்பு சான்றிதழ்
. ஒற்றைச் சாளரமுறை வழிச் சான்று (Counselling Letter)
. மாற்று சான்றிதழ்(Transfer Certificate)
. கல்லுாரி அட்மிஷன் கடிதம்
. கட்டண விபரம்
. கல்லூரியின் Approval/Affiliation சான்று
. பான் கார்டு
. சாதி சான்றிதழ்
. பெற்றோர் ஆண்டு வருமான சான்று
. முதல் பட்டதாரி சான்று மற்றும் உறுதி மொழி சான்று
. கடன் பெறும் வங்கியின் பெயர் மற்றும் வங்கி புத்தகம்.
மதுரை எம்.பி முயற்சி
மதுரை மாவட்ட மாணவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.- என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கேட்டுக்கொண்டுள்ளார். கல்வி கடன் பெறுவது சவாலன ஒன்றாக இருக்கும் சூழலில் மதுரை மாவட்டத்தில் இதனை எளிமையாக்க மதுரை எம்.பி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் இதனை தெரியாமல் தவிர்கும் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிறப்பு முகாம்களும் நடத்தப்படுவது, வரவேற்கதக்கது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Vande Bharat: இப்ப வருகிற வந்தே பாரத் தான் மெயின் பிக்சர்: 31-ல் துவங்கி வைக்கிறார் மோடி!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - சாக்கடை கழிவுகளுக்குள் மூழ்கி சுத்தம் செய்த தொழிலாளி; மதுரையில் அதிர்ச்சி