நாட்டின் பெருமை வந்தே பாரத்
இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் பல்வேறு வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஏற்கனவே 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் 31-ம் தேதி நாகர்கோயில் - சென்னை எழும்பூர் மற்றும் மதுரை - பெங்களூரு கண்டோன்மெண்ட் இடையே இயக்கவுள்ள 2 புதிய வந்தே பாரத் ரயிலை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
வந்தே பாரத் சோதனை ஓட்டம் (Trailer)
மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. முன்னதாக தண்டவாளங்கள் சரிபார்க்கப்பட்டு குறிப்பிட்ட வேகத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. வந்தே பாரத் ரயில் மதுரையிலிருந்து பெங்களூருக்கு இயக்கப்பட உள்ள நிலையில் ஏற்கனவே சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது. இந்நிலையில் வந்தே பாரத் ரயிலை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
மதுரை - பெங்களூரு (Cantonment ) - இனி தான் மெயின் பிக்சர்
தமிழ்நாட்டின் ,தெற்கு மாவட்டங்களை கர்நாடகாவின் ஐ.டி நகருடன் இணைக்கும் வகையில், இந்த வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவது பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது. இந்தநிலையில் இந்த வந்தே பாரத் ரயிலானது, மதுரையிலிருந்து - பெங்களூருக்கு இயக்கப்பட உள்ள புதிய வந்தே பாரத் ரயிலானது மதுரையிலிருந்து காலை 5;15 மணிக்கு புறப்பட்டு மதியம் ஒரு மணிக்கு பெங்களூரு (கண்டோன்மெண்ட்) சென்றடையும். திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், உள்ளிட்ட 6 ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும். மறு மார்க்கமாக மதியம் 1:30 மணிக்கி புறப்பட்டு இரவு 9.54 மணிக்கு மதுரை வந்தடையும். இந்த ரயில் 8 பெட்டிகளை கொண்டது. இந்த ரயில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்தின் ஆறு நாட்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை (Egmore) - நாகர்கோயில்
அதே போல் சென்னை (Egmore) - நாகர்கோயில் இடையிலான இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, நெல்லை ஆகிய 7 இடங்களில் நின்று செல்ல இருக்கிறது. மொத்தம் 16 பெட்டிகள் கொண்டதாக இந்த ரயில் பெட்டி இருக்கும். இதில் ஒரு எக்ஸிகியூடிவ் கிளாஸ் மீதமுள்ள பெட்டிகள் ஏசி சேர் காராக இருக்கும் என சொல்லப்படுகிறது. புதிய வந்தே வாரத்தில் ஆனது சென்னை எழும்பூரில் காலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணியளவில் நாகர்கோவிலில் சென்றடைய உள்ளது. மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2;20 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் ஆனது இரவு 11 ;15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். ஆக ஒரே நாளில் சென்று திரும்பும் வகையில் இயக்கப்பட உள்ளது. புதன்கிழமை தவிர்த்து வாரத்தின் ஆறு நாட்களும் இந்த ரயில் சேவை இயக்கப்படும் என சொல்லப்படுகிறது
புதிய வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது உறுதியான நிலையில், இதில் நேர மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. முழுமையான தகவல் கிடைத்த பின்னர் தெரிவிப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.