ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வேண்டி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கடந்த 2017ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், தமுக்கம் மைதானம், உள்ளிட்ட பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது செல்லூர் அருகே மதுரையை நோக்கிவந்த ரயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 






அப்போது வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு கலவரம் போல மாறியது இது தொடர்பாக  23 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர்  கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட குற்றவியல் 4 -வது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது.



 


 

இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கில் தொடர்புடைய 23பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். கடந்த 5ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவந்த நிலையில் 23பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.