தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி ஊரைச் சேர்ந்தவர் ஆண்டிச்சாமி வயது 58. இவர் அப்பகுதியில் கடை நடத்தி வருகிறார். அவருடைய மகள் அஜிதா வயது 21. இவர் மதுரையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.  தொடர் விடுமுறையால் அஜிதா தனது வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் விடுமுறை முடிந்த மீண்டும் கல்லூரிக்கு செல்வதற்காக அனுமந்தன்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அவரை வழியனுப்புவதற்காக தந்தை ஆண்டிச்சாமி மற்றும் தாயார் ஈஸ்வரி உறவினர் புஷ்பம் ஆகியோரும் பேருந்து நிறுத்தத்திற்கு வந்துள்ளனர். அப்போது கம்பத்தில் இருந்து உத்தமபாளையம் நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்றிருந்த அஜிதா மற்றும் அவர்களது பெற்றோர் உட்பட 4 பேர் மீது மோதியது.




இதில் நான்கு பேரும் படுகாயமடைந்தனர். அஜிதா அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேரும் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தை பார்த்த அருகில் இருந்தவர்கள் உத்தமபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா ஆய்வாளர் சிலை மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் ஈஸ்வரி, புஷ்பம் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் அஜிதாவின் உடல் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.




இந்த விபத்து குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய காரை சின்னமனூரை சேர்ந்த புவனேஸ்வரன் என்பவரை கைது செய்தனர். இந்த விபத்து நடந்த சிறிது நேரத்தில் அனுமந்தன்பட்டி பேருந்து நிலையம் முன்பு அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாகவும் பேருந்துகள் நிற்பதற்கு சரியான இடங்கள் இல்லாததாலும் இடநெருக்கடி ஏற்படுவதாலும் பேருந்து நிறுத்தம் இல்லாத ஒரு சூழ்நிலையும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.




மேலும் வாகனங்களின் வேகத்தை குறைக்காமல் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட வேண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் உத்தமபாளையம் ,குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து வந்த உத்தமபாளையம் வட்டாட்சியர் அர்ஜுனன் மற்றும் போலீஸார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் கோரிக்கையை உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியயின் பொதுமக்கள் மறியலை கைவிட்டுச் சென்றனர். விபத்தை ஏற்படுத்திய கார் கண்ணாடியில் போலிஸ்” என்று போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுருந்ததாகவும், இந்த விபத்தை ஏற்படுத்தியவர் காவல்துறையில் பணிபுரியும் ஒருவராக இருக்கலாம், என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண