மாநகராட்சி பில் கலெக்டரை வீட்டிற்கு வரவழைத்து ஆபாசமாக திட்டிய மண்டலத்தலைவரின் கணவரான முன்னாள் துணை மேயரை கண்டித்து கொட்டும் மழையிலும் தர்ணாவில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள்.

 

தி.மு.க., முன்னாள் துணை மேயரும் மதுரை மாநகராட்சி மண்டலத்தலைவரான பாண்டிச் செல்வியின் கணவரனுமான மிசா பாண்டியன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தி.மு.க., பெண் கவுன்சிலரை தாக்க முயன்ற குற்றச்சாட்டில் தி.மு.க., கட்சியில் இருந்து ஒழுங்கு நடவடிக்கையால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். 

 





இந்நிலையில் மண்டலத்தலைவரின் கணவரான முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியனின் அட்ராசிட்டியின் அடுத்தகட்டமாக மதுரை மாநகராட்சி மண்டலம் 3க்கு உட்பட்ட சுந்தரராஜபுரம் 75ஆவது வார்டு பில் கலெக்டராக பணியாற்றி வரும் ராமச்சந்திரன் என்பவரை தனது வீட்டிற்கு வரவழைத்து, தான் வரி விதிப்பு குறித்து தான் சொன்ன வேலையை செய்யவில்லை என கூறி தரக்குறைவான ஆபாசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இந்நிலையில் மண்டலத்தலைவரின் கணவரான மிசா பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய கோரி நேற்று மாலை முதல் மழையில் நனைந்தபடி மண்டல அலுவலகத்தின் வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மாலை முதல் இரவு வரையிலும் கொட்டும் மழையிலும் நனைந்தபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மிசா பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமச்சந்திரனுக்கு ஆதரவாக சக மாநகராட்சி அலுவலர்கள் 25க்கும் மேற்பட்டோரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 




 

இதுகுறித்து பேசிய பில் கலெக்டர் ராமச்சந்திரன், ”மண்டலம் 3-ல் மண்டலத்தலைவரின் கணவரே அதிகாரிகள் போல தங்களுக்கு பணி உத்தரவு வழங்குவார். மண்டலத்தலைவரின் பெயரை சொல்லி மாநகராட்சி அலுவலர்களை ஆபாசமாக திட்டிவருகிறார். இதனால் அதிகாரிகளும், அலுவலர்களுமே மன உளைச்சலில் உள்ளோம், அவருடன் இருக்கும் அவரது ஆதரவாளர்களும் மாநகராட்சி விவகாரங்களில் தலையிடுவதாகவும் தெரிவித்தார்.

 


மாநகராட்சி பில் கலெக்டரை வீட்டிற்கு வரவழைத்து ஆபாசமாக திட்டிய மண்டலத்தலைவரின் கணவரான முன்னாள் துணை மேயரை கண்டித்து கொட்டும் மழையிலும் தர்ணாவில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.