ஒவ்வொரு மாநில மக்களுக்கும் ஒவ்வொரு பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். தமிழர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் பொங்கல் பண்டிகை எப்படி மிக மிக முக்கியமானதோ, மலையாள மொழி பேசும் மக்களுக்கும், கேரளாவினருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஓணம் பண்டிகை ஆகும். ஓணம் பண்டிகையை மலையாள மக்கள் 10 நாட்கள் கொண்டாடுகின்றனர். அதாவது, மலையாளத்தில் சிம்ம மாதமான இந்த மாதத்தில் கடந்த 20-ஆம் தேதி முதல் இன்று 29-ஆம் தேதி வரை என 10 நாட்கள் திருவோண பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் மிகப்பெரிய திருவிழாவான திருவோண நட்சத்திரத்தில் வரும் திருவோண பண்டிகை நாள் இன்று 29-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் 10 நாட்களும் ஒவ்வொரு நாளுக்கு ஒரு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
முதல் நாள் – அத்தம்
2வது நாள் – சித்திரா
3வது நாள் - சுவாதி
4வது நாள் – விசாகம்
5வது நாள் – அனுஷம்
6வது நாள் – திருக்கேட்டை
7வது நாள் – மூலம்
8வது நாள் – பூராடம்
9வது நாள் – உத்திராடம்
10வது நாள் – திருவோணம்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள மக்கள் தங்களது வீடுகளில் தோரணம் கட்டி மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனை தொடர்ந்து ஓணம் பண்டிகைக்காக போடப்பட்ட அத்தப்பூ கோலத்தினை அண்டை வீட்டில் உள்ளவர்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து ஓணம் வாழ்த்துகளை தெரிவித்தனர். இதனையடுத்து நடந்தப்பட்ட ஓணம் விருந்திற்கு வரவேற்கும் விதமாக நண்பர்களையும் , அண்டை வீட்டார்களையும் பருப்பு பாயாசம் கொடுத்து அழைத்தனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள மக்கள் ஓவ்வொருவரும் குடும்பம் குடும்பமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து உற்சாகமாக கொண்டாடினர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ஆளுநருக்கு கருப்புக்கொடி.. வழக்குப்பதிவுக்கு எதிராக போராட்டம்.. குண்டுக்கட்டாக தூக்கிய காவல்துறை..!
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Coimbatore: கோவை மேயர் கல்பனா மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்.. பாதுகாப்பு வழங்க கோரி இளம்பெண் கோரிக்கை..!