சினிமா சூட்டிங்கிற்கிற்கு அழைத்துசென்ற துணை நடிகர்களுக்கான ஊதியத்தை வழங்காமல் ஏமாற்றிவருவதாக சினிமா ஏஜண்ட் மீது துணை ஏஜெண்ட்கள் சார்பு நீதிபதியிடம் புகார் மனு.


சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதியிடம்  புகார் மனு அளித்தனர்


மதுரையைச் சேர்ந்த ஏராளமான துணை நடிகர்களை நடிகர் ஆர்யா நடிக்கும் படத்திற்காக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் ஏர்வாடி பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 13 நாட்கள் நடித்ததற்கான ஊதியத்தை துணை நடிகர்களுக்கு வழங்காமல் ஏமாற்றி வருவதாகவும். அதே, போல் காரைக்குடியில் துல்கர் சல்மான் நடித்த திரைப்படத்திற்கும், தேனியில் பொன்ராம் இயக்கத்தில் நடைபெறக்கூடிய சினிமாவில் நடித்த துணை நடிகர்களுக்கான அட்வான்ஸ் மட்டும் கொடுத்துவிட்டு ஊதியத்தை வழங்காமல் ஏமாற்றியுள்ளனர். சினிமா ஏஜென்ட் மைக்கேல் என்பவர் ஏமாற்றி வருவதாக கூறி துணை ஏஜெண்டுகளான தேனியை சேர்ந்த ராணி, மதுரையைச் சேர்ந்த பாண்டி மற்றும் பாண்டிசெல்வி , ஆண்டாள்புரம் பகுதியை சேர்ந்த முத்துதேவி ஆகியோர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதியிடம்  புகார் மனு அளித்தனர்.


- Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?


ஒவ்வொரு ஏஜெண்டுகளும் ஒரு லட்சம் ரூபாய் ஏமாற்றம்


இது தொடர்பாக பேசியவர்கள்...,” இதுபோன்று துணை நடிகர்களை சூட்டிங் என அழைத்துச் சென்று அவர்களுக்கான ஊதியத்தை வழங்காமல் சினிமா ஏஜண்ட் மைக்கேல் என்பவர் ஏமாற்றி வருவதாகவும், அவர் சினி ஏஜெண்ட் அசோசியேசன் என்ற பதிவு செய்யப்பட்ட சங்கத்தில் இருந்த நிலையில், அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதால் சங்கத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  இந்தநிலையிலும் தொடர்ச்சியாக துணை நடிகர்களுக்கு ஊதியம் வழங்காமல் ஏமாற்றி வருகிறார்.  இதனால்  தாங்கள் அழைத்துச் செல்லும் துணை நடிகர்களும் பணம் கேட்டுக் கொண்டே இருப்பதால், இதுகுறித்து மைக்கில் இடம் தொடர்பு கொள்ள முயன்ற போது செல்போனை எடுப்பதில்லை, மேலும் என்னால் தர முடியாது என தொடர்ந்து கூறி வருவதால் ஒவ்வொரு ஏஜெண்டுகளும் ஒரு லட்சம் ரூபாய் அளவிற்கு பணத்தை மோசடி செய்துள்ளார் என குற்றம் சாட்டினார்.


கடன் வாங்கி ஊதியத்தை கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.


இதேபோன்று மைக்கேல் நெல்லை, கோவை ஆகிய பகுதிகளில் உள்ள துணை ஏஜண்டுகள் அழைத்துவந்த துணை நடிகர்களுக்கும் ஊதியம் தரவில்லை எனவும் தெரிவித்தனர். இது குறித்து whatsapp குழுக்களில் அவரிடம் கேட்டால் எனது பெயரையும் எனது புகைப்படத்தையும் பயன்படுத்தக் கூடாது என மிரட்டுவதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக பெப்சி சங்கத்திற்கு தெரிவித்த நிலையிலும் அவர்களும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நாள்தோறும் துணை நடிகர்கள் ஏமாற்றப்பட்டு வருவதாக தெரிவித்தனர். மதுரை ரயில்வே நிலையத்தில் உள்ள துணை நடிகர்கள் தங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று புகார் அளித்த நிலையில் அவர்களுக்கான ஊதியத்தை ஏஜென்ட் மைக்கேல் வழங்காத நிலையில் தாங்கள் கடன் வாங்கி ஊதியத்தை கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மு.க.ஸ்டாலின் VS உதயநிதி! இளைஞரணிச் செயலாளர் முதல் துணை முதல்வர் வரை - ஓர் அலசல்


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?