Tamilnadu Cabinet: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று பிற்பகல் துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
தமிழக அமைச்சரவை மாற்றம்:
தமிழக அமைச்சரவையில் மாற்றம் நிகழ உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று வெளியான ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பால், அமைச்சரவை மாற்றம் என்பது உறுதியாகியுள்ளது. அதன்படி, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக உள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சராக உள்ள அவருக்காக, முதலமைச்சர் ஸ்டாலின் நிர்வகித்து வந்த ஒரு துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோக, 3 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, 3 அமைச்சர்கள் புதியதாக அமைச்சரவையில் இணைக்கப்படுகின்றனர்.
நீக்கப்பட்ட & இணைக்கப்படும் அமைச்சர்கள்:
பால்வள அமைச்சராக உள்ள மனோ தங்கராஜ், சிறுபான்மையின நல அமைச்சராக உள்ள செஞ்சி மஸ்தான், வன அமைச்சராக இருந்த K ராமசந்திரன் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு மாற்றாக ஆவடி நாசர், கோவி.செழியன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் மற்றும் அண்மையில் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி ஆகியோர் அமைச்சரவையில் இணைக்கப்பட உள்ளனர்.
கைமாறும் இலாகாக்கள்:
- உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வனத்துறை அமைச்சராக மாற்றம்
- சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம்
- ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக மாற்றம்
- வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக மாற்றம்
- பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பால்வளத்துறை அமைச்சராக மாற்றம்
- நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கூடுதலாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை
- அமைச்சர் கே. ராமச்சந்திரன் அரசு கொறாடவாக மாற்றம்
- உதயநிதிக்கு கூடுதலாக முதலமைச்சர் வகித்து வரும் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட வாய்ப்பு
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்சாரத்துறையும், கோவி செழியனுக்கு உயர்கல்வித்துறையும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போதைய சூழலில் எந்தெந்த அமைச்சர்கள், என்னென்ன துறைகளை நிர்வகிக்கின்றனர் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
தமிழ்நாடு அமைச்சரவை விவரங்கள்:
அமைச்சர்கள் | நிர்வகிக்கும் துறைகள் |
மு.க. ஸ்டாலின் | பொது, பொது நிர்வாகம், இந்திய நிர்வாகப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வனப் பணி, பிற அகில இந்தியப் பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை, இல்லம், சிறப்பு முயற்சிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் நலன். |
துரைமுருகன் | நீர்வளத்துறை அமைச்சர் |
கே.என். நேரு | நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் நீர் வழங்கல். |
ஐ. பெரியசாமி | ஊரக வளர்ச்சித்துறை |
பொன்முடி | உயர் கல்வி |
எ.வ. வேலு | பொதுப்பணித்துறை |
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் | வேளாண்துறை அமைச்சர் |
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் | வருவாய் & பேரிடர் மேலாண்மை |
தங்கம் தென்னரசு |
நிதி, மின்சாரத்துறை |
உதயநிதி | இளைஞர் நலன் & விளையாட்டு மேம்பாடு, |
ரகுபதி | சட்டத்துறை |
முத்துசாமி | வீட்டுவசதித்துறை |
பெரியகருப்பன் | கூட்டுறவுத்துறை |
அன்பரசன் | குடிசை & தொழில்கள் |
சாமிநாதன் | தமிழ் வளர்ச்சித்துறை |
கீதாஜீவன் | பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை |
அனிதா ராதாகிருஷ்ணன் | மீன்வளம், மீன்வள மேம்பாட்டுக் கழகம் மற்றும் கால்நடை பராமரிப்பு |
ராஜகண்ணப்பன் | பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை |
ராமச்சந்திரன் | சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் |
சக்கரபாணி | உணவு மற்றும் குடிமைப் பொருட்கள் |
காந்தி | கைத்தறி மற்றும் ஜவுளி |
மா. சுப்பிரமணியன் | சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன் |
மூர்த்தி | வணிக வரி, பத்திர பதிவுத்துறை |
சிவசங்கர் | போக்குவரத்து துறை |
சேகர்பாபு | இந்து சமய அறநிலையத்துறை |
பழனிவேல் தியாகராஜன் | தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் |
செஞ்சி மஸ்தான் | சிறுபான்மையினர் நலத்துறை |
அன்பில் மகேஷ் | பள்ளிக் கல்வி |
மெய்யநாதன் | சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு |
சி.வி.கணேசன் | தொழிலாளர் நலன் |
மனோ தங்கராஜ் | பால்வளத்துறை |
டிஆர்.பி. ராஜா | தொழில்துறை |
மதிவேந்தன் | வனத்துறை |
கயல்விழி | ஆதி திராவிடர் நலன் |