மதுரையில் குழந்தை கடத்தல் தொடர்பாக சமூகவலைதளங்களில் பரவும் தவறான தகவலை பரப்பி பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கினால் கடும் நடவடிக்கை - மாநகர காவல்துறை எச்சரிக்கை.
குழப்பத்தையும் ஏற்படுத்திவந்தது
மதுரை மாநகர் பகுதிகளில் குழந்தைகள் கடத்தப்படுவதாக நேற்று முழுவதும் பெண் போல வேடமிட்ட நபர் ஒருவர் கடத்துவதாக கூறி வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு சமூகவலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். மேலும் பல்வேறு பள்ளிகளிலும் இதன் உண்மைதன்மை அறியாமல் குழந்தைகளின் பெற்றோரை அச்சுறுத்தும் வகையில் இது போன்ற தகவல் பரவுகிறது. கவனமோடு இருக்க வேண்டும் என கூறிவருகின்றனர். இந்த தகவல் மதுரை மாவட்ட பெற்றோர்களிடையே கடும் அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்திவந்தது.
இந்நிலையில் காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ”குழந்தை கடத்தல் தொடர்பாக பொய்யான காணொலி பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, அது பொதுமக்களிடையே தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்திவருகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மாதிரியான பொய்யான வீண் வதந்திகளை பதிவேற்றம் செய்பவர்கள் மற்றும் பகிர்பவர்களை சமூக ஊடகப்பிரிவு மூலம் (Social Media Cell) கண்காணிக்கப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கை உட்படுத்தப்படுவார்கள்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இது தொடர்பான தகவல்களை காவல்துறை உதவி எண் 100 அல்லது 112 கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Madurai Arittapatti: பறவை நேசருக்கு குவியும் பாராட்டு! கணக்கெடுப்பு பணியில் தொடரும் ஆச்சரியங்கள்!
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - BAPS Hindu Temple: அபுதாபி இந்து கோயிலில் குவியும் பக்தர்கள்! கட்டுப்பாடுகளும், அம்சங்களும் என்னென்ன?