சித்திரைத் திருவிழா பாதுகாப்பு குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், காவல்துறை ஆணையரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. - அரசுத்தரப்பு தகவல்


அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.


மதுரை மீனாட்சியம்மன் கோவில்


கடம்பவனத்துப் பேரரசி மீனாட்சி, மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறாள். ‘ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி’ என்றே மீனாட்சியை பெருமை கொள்வர். சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும். இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்தே மாமதுரை நிர்மாணிக்கப்படுகிறது. தமிழ் மாதங்களில் வழியே பல்வேறு திருவிழா முன்னெடுக்கப்படும். உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரையின் நடுவிலும் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.


சித்திரைத் திருவிழா


மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், "சித்திரை திருவிழாவின்போது போதுமான அளவு காவல்துறை பாதுகாப்பு வழங்கவும், மொபைல் மருத்துவ சேவைகளை வழங்கவும், மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் திருக்கோவிலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் சித்திரை திருவிழாவின் போது சப்பரம் செல்லும் பகுதிகளில் சாலை வசதி முறையாக செய்யப்பட்டு இருப்பதையும், முறையான மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளதையுன் உறுதிபடுத்த வேண்டும் என பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. சித்திரைத் திருவிழா பாதுகாப்பு குறித்து எவ்வளவு காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.



அரசு தரப்பில், "மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், காவல்துறை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.   சித்திரை திருவிழாவை சிறப்பாக நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள்  ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.


 


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Lok Sabha Election: தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட போட்டியிடாத திருநர்; சமூக பார்வையோடு அலசப்பட்ட வேட்பாளர் பட்டியல்!


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - K.S.Ravikumar : ”ராமராஜனுக்கு வந்த கூட்டத்த பார்த்து ரஜினியே பயந்துட்டார்” மனம் திறந்த கே.எஸ்.ரவிகுமார்!