மத்திய அரசு, மாநில அரசுடன் பகிர்ந்து கொள்ளாத செஸ் வரியை தாறுமாறாக உயர்த்தியது தான் பணவீக்கத்திற்கு முக்கிய காரணம் என காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டியளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் பேசுகையில், உலக அளவில் பசியால் பாதிக்கப்படும் நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 101 வது இடம் கிடைத்துள்ளது. இதுவே பாஜகவின் 8 ஆண்டு கால சாதனை என கருத்து தெரிவித்தவர், இஸ்லாமிய விரோத கருத்திற்கு அரசியல் கட்சிகளின் எதிர்ப்பிற்கு நடவடிக்கை எடுக்காத இந்திய அரசு,16 இஸ்லாமிய நாடுகளின் கண்டிப்பிற்கு பணிந்து நடவடிக்கை எடுக்கிறது. இந்திய மக்களுக்கு பாதுகாப்பு, இந்திய அரசியல் கட்சிகளா? அன்னிய நாடுகளா? என கேள்வி எழுப்பினார்.
மேலும் “சீனா, இந்தியப் பகுதியை ஆக்கிரமித்து இருப்பது உண்மை, இதனை செயற்கைக்கோள் புகைப்படங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பிரதமர் இல்லை என சாதிக்கின்றார். தேர்தல் அறிக்கை என்பது ஐந்து ஆண்டுக்குள் நிறைவேற்ற வேண்டியவை. திமுக தனது தேர்தல் அறிக்கையை 5 ஆண்டு காலத்திற்குள் முழுமையாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்