எதிர்க்கட்சி ஆளும் மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான ஆளும் கூட்டணி பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. மாநிலங்களவையில் காலியாகவுள்ள 16 இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. 41 வேட்பாளர்கள் போட்டியின்று தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜூலை மாதம், குடியரசு தலைவர் நடைபெறவுள்ள நிலையில், இந்த மாநிலங்களவை தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.


எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மகாராஷ்டிராவில் காலியாகவுள்ள ஆறு இடங்களில் ஆளும் கூட்டணி மூன்று இடங்களிலும் பாஜக இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்ற நிலையில், ஆறாவது இடத்திற்கு இரண்டு கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக, பாஜக சார்பில் போட்டியிட்ட தனஞ்சய் மகாதிக் வெற்றிபெற்றதாக இன்று காலை அறிவிக்கப்பட்டது.


எதிர்பாராதவிதமாக, பாஜகவுக்கு 10 வாக்குகள் அதிகமாக கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது. ஒரு மாநிலங்களவே இடத்தை கைப்பற்ற 41 எம்எம்ஏக்களின் வாக்குகள் தேவை. மகாராஷ்டிராவிலிருந்து பாஜகவின் பியூஷ் கோயல், அனில் பாண்டே, காங்கிரஸின் இம்ரான் பிரதாப்காரி, தேசியவாக காங்கிரஸின் பிரபுல் படேல், சிவசேனையின் சஞ்சய் ராவத் ஆகியோர் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். 


இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும் மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "போட்டிக்காக மட்டும் தேர்தல்களில் போட்டியிடுவதில்லை. வெற்றிக்காகவும்தான். மகாராஷ்டிரா வாழ்க" என பதிவிட்டுள்ளார். மகாராஷ்டிராவில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவை தேர்தலில் போட்டி ஏற்பட்டுள்ளதால் ஆளும் சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளது. கைதாகியுள்ள ஆளும் கூட்டணியின் முன்னாள் அமைச்சர்கள் நவாப் மாலிக், அனில் தேஷ்முக் ஆகியோர் சிறையில் இருக்கின்றனர். அவர்களுக்கு வாக்களிக்க பிணை மறுக்கபட்டுள்ளது.


இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பட்னாவிஸ், ""சிவசேனாவின் சஞ்சய் ராவுத்தை விட தனஞ்சய் மகாதிக் அதிக வாக்குகள் பெற்று சிவசேனாவின் சஞ்சய் பவாரை தோற்கடித்தார். ஒரு ஓட்டை தேர்தல் ஆணையம் ரத்து செய்துவிட்டதாக நாளை சொல்லலாம். அந்த வாக்கு அவருக்கு (சஞ்சய் பவார்) கிடைத்திருந்தால் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம். நவாப் மாலிக் வந்திருந்தாலும் நாங்கள் ஜெயித்திருப்போம்" என்றார்.


ஆளும் கூட்டணியும் பாஜக கூட்டணியும் கட்சி மாறி வாக்களித்ததாக புகார் தெரிவித்த நிலையில், எட்டு மணி நேர தாமதத்திற்கு பிறகே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண