மதுரை போலீசார் இருசக்கர வாகனத்தையும் 1.95 கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மதுரையில் பரவிக்கிடக்கும் கஞ்சா
தென் மாவட்டங்களில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கஞ்சா விற்பனை அமோகமாக இருக்கிறது. கஞ்சா விற்பனையால் பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்தும் முயற்சியாக, கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் மற்றும் அவரது நெருங்கிய உறவினரின் சொத்துக்கள் முடக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கஞ்சா விற்பனை கட்டுக்குள் வந்தபாடில்லை. பல இடங்களில் கஞ்சா விற்பனை எளிமையாக நடைபெற்று வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கஞ்சா பயன்படுத்துவதும் சோகமான விசயம். பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தாலும் கஞ்சா பயன்பாடு இருந்து வருகிறது. இந்நிலையில் மதுரையில் டூவீலரில் கஞ்சா கடத்திய இருவர் கைது செய்யப்பட்டு 1.95 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
டூவீலர் மூலம் கஞ்சா
மதுரை மாநகர் திலகர் திடல் காவல்துறையினருக்கு கஞ்சா கடத்திச் செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் திலகர் திடல் போலீசார் வைகை தென்கரை பேச்சியம்மன் படித்துறை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த பல்சர் டூவீலரை நிறுத்தி விசாரித்த நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த சக்திவேல் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த சூர்யா என்ற இருவரும் வந்துள்ளனர். முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் 30000 பணம் கொடுத்து 1.95 கிலோ கஞ்சாவை வாங்கி வந்தது தெரிய வந்தது.
6 பேரும் மீது வழக்கு பதிவு
இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்து இதற்கு உடந்தையாக இருந்த அஜய் சிலம்பரசன், பாண்டி கார்த்திக், அஜித் குமார் உள்ளிட்ட மற்ற 6 பேரும் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் இருசக்கர வாகனத்தையும் 1.95 கஞ்சாவையும் பறிமுதல் செய்து உள்ளனர்.
ALSO READ | TVK Vijay Speech: பரந்தூரில் அனல் பறந்த விஜயின் பேச்சு.. விவசாயிகளுக்கு ஆதரவாக தவெக, திமுக அட்டாக் வீடியோ