TVK Vijay Speech: பரந்தூரில் அனல் பறந்த விஜயின் பேச்சு.. விவசாயிகளுக்கு ஆதரவாக தவெக, திமுக அட்டாக் வீடியோ

TVK Vijay Speech Video: பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, விஜய் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

TVK Vijay Speech Video: பரந்தூர் விமான நிலைய திட்டத்தில், ஆளுங்கட்சிக்கு ஏதோ லாபம் இருப்பதாக விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.

Continues below advertisement

திமுகவை சாடிய விஜய்:

பரந்தூரில் விவசாயிகள் மத்தியில் பேசிய தவெக தலைவர் விஜய், “சமீபத்தில் அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. அதனை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஆனால், அதே நிலைப்பாட்டை தானே பரந்தூர் பிரச்னையிலும் எடுத்து இருக்க வேண்டும். எப்படி அரிட்டாப்பட்டி மக்கள் நம்முடைய மக்களோ, அதே மாதிரி பரந்தூர் மக்களும் நம்முடைய மக்கள் தானே. அப்படித்தானே ஒரு அரசாங்கள் யோசித்திருக்க வேண்டும். ஆனால், அரசு அப்படி செய்யவில்லையே. ஏனென்றால் இந்த விமான நிலையத்தையும் தாண்டி, இந்த திட்டத்தில் அவர்களுக்கு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது. அதை நம்முடைய மக்கள் தெளிவாக புரிந்துகொண்டுள்ளனர்” என விஜய் பேசினார்.

விஜயின் அனல் பறந்த அரசியல் பேச்சு

 

Continues below advertisement