மதுரை ரயில் நிலையத்தில் இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகளுக்காக மின் தடங்கள் மாற்றும் பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக ஜனவரி 26, 27, 30, பிப்ரவரி 1, 2, 3 ஆகிய நாட்களில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் அமிர்தா விரைவு ரயில் (16343) மதுரை ரயில் நிலையம் வரை இயக்கப்படாமல் கூடல் நகர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.

 



 

அதேபோல ஜனவரி 27, 28, 31, பிப்ரவரி 2, 3, 4 ஆகிய நாட்களில் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய அமிர்தா விரைவு ரயில் (16344) கூடல் நகரில் இருந்து இயக்கப்படும். ஜனவரி 27, 28, 31, பிப்ரவரி 3, 4 ஆகிய நாட்களில் சென்னை - மதுரை - சென்னை தேஜாஸ் விரைவு ரயில் (22671/22672) மதுரை ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடைக்கு பதிலாக மூன்றாவது நடைமேடையில் கையாளப்படும்.