சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

 

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கேட்ட கேள்விக்கு.

 

நாட்டின் வரலாற்றிலேயே இவ்வளவு நாசகார சக்தி இதுவரை வந்ததில்லை என்று சொல்லக்கூடிய வகையில் இந்துத்துவா தத்துவத்தையும் சனாதன தர்மத்தை வைத்து ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம் ஒரே கலாச்சாரம் என்று நடைமுறைக்கு உதவாவதும், ஒருபோதும் நடக்க கூடாததுமான ஒரு விஷத்தை பி.ஜே.பி., கூட்டம் கக்கி கொண்டிருக்கின்றது.



 

அதற்கு சரியான பதிலை தமிழ்நாடு கொடுக்கும் தமிழகத்தை அதற்கு இடமில்லை என்பதை வரலாறு நிரூபிக்கத்தான் போகிறது. பா.ஜ.க.,வை தமிழகம் ஏற்றுக் கொள்ளாது சனாதன தர்மத்தையும், இந்துத்துவாவையும் ஏற்றுக்கொள்ளாது. இந்துத்துவா தத்துவத்தினுடைய அடிப்படையில் தான் அவர்கள் ஒருமைப்பாட்டை கொண்டு வரப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். சனாதன தர்மம் இந்துத்துவா மற்றும் இந்தி பிறகு சமஸ்கிருதம் இதுதான் அவருடைய திட்டம் அவருடைய நோக்கம் அது நடக்காது நாளைய கூட்டத்திலே அது பற்றி விரிவாக நான் சொல்லுகிறேன் என கூறினார்.